Tenkasi

News August 29, 2024

முதலமைச்சர், கலெக்டருக்கு நன்றி தெரிவித்த MLA பழனி நாடார்

image

தென்காசி MLA பழனி நாடார் இன்று(ஆக.,29) வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது கோரிக்கையை ஏற்று நேற்று லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலியான திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க ஆணை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பரிந்துரை செய்த கலெக்டர் கமல் கிஷோருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

News August 29, 2024

சுரண்டை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே நேற்று(ஆக.,28) காலை லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமுற்றனர். விபத்தில் பலியான 3 பேருக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என பழனி நாடார் MLA வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News August 28, 2024

மருத்துவமனையில் நலம் விசாரித்த எஸ் பி

image

சுரண்டையில் இன்று சரக்கு வாகனம் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை நலம் விசாரித்தார். தொடர்ந்து இன்று மட்டும் 41 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

News August 28, 2024

லோடு ஆட்டோ விபத்து எஸ்பி உத்தரவு 

image

சுரண்டை அருகே இன்று காலையில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் பலியானதை அடுத்து மாவட்டம் முழுவதும் லோடு வாகனங்களில் பயணிகளை ஏற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன உத்தரவிட்டார்.
அதன் பேரில் இன்று (28ம் தேதி) சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றதாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News August 28, 2024

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வு குழு கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு முதலிய ஆய்வு கூட்டங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

News August 28, 2024

தென்காசியில் லாரி மோதி சிறுவர்கள் படுகாயம்

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலை சிக்னல் பகுதியில்  மாரிசுதன், செம்மொழி செழியன் என்ற இரண்டு  பள்ளி மாணவர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News August 28, 2024

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பாஜக பிரமுகர் ஆறுதல்

image

தென்காசி அரசு மருத்துவமனையில் இன்று காலை சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் பாஜக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

News August 28, 2024

பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம்

image

வாசுதேவநல்லூர் ஐயப்பன் திருமண மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 28)
இந்திய தகவல் மற்றும் மக்கள் தொடர்பக அமைச்சகத்தின்
சென்னை
மண்டலம் சார்பாக, “பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்” குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இராணி ஸ்ரீகுமார் எம்பி, சதன்திருமலைக்குமார் எம்எல்ஏ மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

தென்காசி முழுவதும் கண்காணிக்க SP உத்தரவு

image

சுரண்டை அருகே வாடியூரில் இன்று காலை லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் வயல் வேலைக்கு சென்ற 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில், தென்காசி SP ஶ்ரீனிவாசன் நேரில் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் மாவட்டம் முழுவதும் லோடு வாகனங்களில் பயணிகளை ஏற்றுவதை கண்காணிக்குமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

News August 28, 2024

தென்காசியில் பொதுமக்கள் வசதிக்காக முகாம் இடமாற்றம்

image

ஆலங்குளம் அருகே நெட்டூர், அய்யனார்குளம், சுப்பையாபுரம், நாரணபுரம், மேலவீராணம், கிடாரகுளம் குறிப்பன்குளம் ஆகிய ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஆக.,29ஆம் தேதி மேட்டூர் சமுதாய நலக்கூடத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் எளிதில் சென்று பயன்பெறும் வகையில் குறிப்பன்குளம் ஊராட்சி எஸ்பிஎல் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!