India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கல்லூரிகளும் இந்த பல்கலை.யில் இணைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. *உங்கள் பகுதி கல்லூரி மாணவர்களுக்கு பகிரவும்*
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை பார்வையிட இன்று (டிச.13) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தென்காசி வருகை தந்தார். இதையடுத்து, அவரை முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி வரவேற்றார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று(டிச.,13) காலை வெளியிட்டுள்ள தகவலில், மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8.30 மணி முதல் அதிகாலை 6.30 மணி வரை 10 மணி நேரத்தில் சுமார் 1884 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். நேற்று தொடர்ந்த மழை இன்றும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுரண்டை நகராட்சி ஆலடிப்பட்டியை சேர்ந்த அந்தோணி என்பவரது வீட்டின் ஒரு பகுதி, நேற்று(டிச.,12) இரவு பெய்த மழையில் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில், வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் கணேசன்(40) மற்றும் அவரது மனைவி பார்வதி(37) மற்றும் அவர்களது குழந்தை லேசான காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை 13மணி நேரத்தில் 401 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையிலேயே இன்று அதிகாலையில் இருந்து பெய்த மழையின் அளவு அதிகமாக இருக்கிறது. கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் இன்று (டிச.12) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633 – 290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி சிஇஒ இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் (Govt ,Govt aided ,Matric schools,Cbse school) நாளை 13 ம் தேதி அதிக கன மழை காரணமாக விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த விதமான பள்ளிகளும் எக்காரணத்தைக் கொண்டும் இயங்கக் கூடாது என அறிவிக்கப்படுகிறது. மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.12 இரவு 10 மணி முதல் டிச.13 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.