India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <

தென்காசி மாவட்ட மக்கள் கன்னியாகுமரிக்கு செல்வதற்கு இணைப்பு ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து அதிகாலை ஈரோட்டுக்கு செல்லும் ரயில் நெல்லை வழியாக செல்கிறது. நெல்லைக்கு சென்றதும் அங்கிருந்து காலை 7:00 மணிக்கு நெல்லை – நாகர்கோவில் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயில் மூலம் தென்காசி மாவட்டத்தினர் குமரிக்கு செல்ல முடியும்.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வைல்ட்ட்னெஸ் எஸ்பிரிங்ஸ் கார்பொரேஷன்(TN wildness experience corporation) சேர்ந்து தென்காசி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் உள்ள 50 பள்ளி மாணவர்களுக்கு வன & சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் 22.01.2026 அன்று நடைபெற உள்ளது.

தென்காசி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <

தென்காசி வீரகேரளம்புதூரை அடுத்துள்ள ராஜகோபாலப்பேரியை சேர்ந்த செல்வராஜ் (45) கூலித் தொழிலாளியான வீராணத்திலிருந்து வீரகேரளம்புதூர் நோக்கி பைக்கில் சென்ற போது வீரகேரளம்புதூரில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புதூர் போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டத்தில் வனஉயிரினக் குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால் புளியங்குடி வனச்சரக அலுவலர் கைபேசி எண்: 9159399456 மற்றும் மாவட்டவன அலுவலர் கட்டுப்பாட்டு அறை எண்: 04633 233550, 04633 233660 ஆகிய எண்ணிலும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவரின் முகவரி ரகசியம் பாதுகாக்கப்படும். *ஷேர் பண்ணுங்க

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (21-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.

இராயகிரி அம்மன் சன்னதி தெருவில் வசித்து வரும் செல்வக்குமார். திருமலாபுரம் , பகுதியில் கரும்பு விவசாயம் செய்து வரும் இடத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, மின்வேலியில் மின்சாரத்தை பாய்ச்சி வனவிலங்குகளை கொல்ல முயன்ற குற்றத்திற்கு (ஜன.20) பிடித்து வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டு வனஉயிரின வழக்கு பதிவு செய்து 5,50,000 அபராத தொகை விதிக்கப்பட்டது.

வாசுதேவநல்லூர் ஊருணியில் மிதந்த முதியவர் சடலத்தை போலீசார் நேற்று மீட்டனர். வாசுதேவநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊருணியில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாரும், தீயணைப்பு நிலையத்தினரும் சென்று சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவர் வாசுதேவநல்லூர் மேல ரத வீதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் இசக்கி(86) எனத் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.