Tenkasi

News January 21, 2026

தென்காசி : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

தென்காசி வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்

image

தேமுதிக மாநில பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலங்குளத்தில் வருகின்ற 29ம் தேதி உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்வின் மூலம் மக்களை சந்திக்கிறார். ஆலங்குளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தொடங்கி பெருந்தலைவர் காமராஜர் சிலை பேரணி நடைபெற உள்ளது. ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடம் உரையாற்றுகிறார்.

News January 21, 2026

தென்காசி : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 21, 2026

தென்காசி: கல்யாணம் ONLINEல் விண்ணப்பிப்பது எப்படி!

image

தென்காசி மக்களே ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற மிக அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phoneலே விண்ணப்பியுங்க.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்து சான்றிதழ் பெறலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்.. SHARE பண்ணுங்க..

News January 21, 2026

தென்காசியில் கடைகளில் திடீர் சோதனை

image

தென்காசி நகராட்சி 29 வது வார்டு சுவாமி சன்னதி பஜார், மற்றும் 30வது வார்டு கீழ ரத வீதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் உத்தரவு படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடைகளில் நடத்திய சோதனையில் நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News January 20, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (20-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News January 20, 2026

தென்காசி: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 24.11.2025 ஆம் தேதி தொடர் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் விதமாக வரும் 24ம் தேதி சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாட்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.

News January 20, 2026

தென்காசி: ரூ.20 செலுத்தினால் போதும்., ரூ.2 லட்சம் காப்பீடு!

image

தென்காசி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News January 20, 2026

தென்காசி: குறைகளை தெரிவிக்க இங்கு செல்லலாம்!

image

ஜன 26ம் தேதி குடியரசு தினமன்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளர்.

News January 20, 2026

தென்காசி: உங்கள் பகுதியில் என்ன பிரச்னை?

image

தென்காசி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <>CLICK <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!