India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று(டிச.,17) டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் நேரில் சந்தித்து நெல்லை மக்களவைத் தொகுதிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி, உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். அதில் குறிப்பாக நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் உள்ள பாவூர்சத்திரம் ரயில்வே பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பின்படி, குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக தென்காசி மைய நூலகத்தில் டிச.,23 – 31 வரை மாணவர்களுக்காக திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, வினாடி – வினா என போட்டிகள் நடைபெற இருக்கின்றன. பரிசுத்தொகை முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என வழங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு நூலகத்தை தொடர்பு கொள்ளவும்: 04633 – 225143.
தென்காசி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை(டிசம்பர் 12) அன்று மதியம் 11, 9, 7 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக விடுமுறை விடப்பட்டு, தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அன்று நடைபெற வேண்டிய தேர்வை நாளை(டிசம்பர் 19) நடத்திடுமாறு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 24 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், அதற்கான வெள்ளிவிழாவையொட்டி தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை திருக்குறள் விளக்கப் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், திருக்குறள் பேச்சுப்போட்டி நடைபெறுவதாகவும், இதில் மாணவ மாணவிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அசுவினி வைஷ்ணவை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேற்று (டிச.17) சந்தித்தார். அப்போது, “தென்காசி பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேவையான ரயில்வே திட்டங்களை செயல்படுத்தவும், ரயில் எண். 07175/07176, செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறும்” கோரிக்கை மனுவினை அளித்தார்.
தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் (டிச.17) இரவு 10 மணி முதல் (டிச.18) காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கலாம் அறிவிக்கபட்டுள்ளது.
குற்றாலத்தில் புதிதாக தொழிலாளர் நலத்துறையின் மூலம் திரு.வி.க இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வி கணேசன் நாளை (டிசம்பர் 18) வருகை தருகிறார். இதை முன்னிட்டு அமைச்சரை வரவேற்க தென்காசி மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் தயாராக இருக்கும்படி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை – இலஞ்சி இடையேயான ரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணிகள் நாளை(டிச.,18) தொடங்க உள்ளதால் ரயில்வே கேட் மூடப்பட உள்ளது. எனவே இலத்தூர் விலக்கிலிருந்து கணக்குப்பிள்ளை வலசை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது பரிசிலித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களது தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும். அரசின் திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுமாறு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவிகளில் சீரமைப்பு பணி காரணமாக குளிப்பதற்கு தடை தொடர்கிறது. அதை தவிர குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலியருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. ஐந்தருவிகளில் பெண்கள் கூட்டம் இல்லாமல் சாதாரணமாகவே இருக்கிறது. மற்ற அருவிகளில் மிதமான கூட்டமே காணப்படுகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, தற்போது சற்று சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.