India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி கிளப் ராஜபாளையம் இணைந்து நடத்தும் போதை ஒழிப்பு பேரணி இன்று (அக்.6) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த பேரணியானது சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முதல் திருவேங்கடம் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள மைதானம் வரை நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(அக்.05) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024 -25 ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு இன கோழி குஞ்சுகள் வளர்ப்பதற்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 முதல் தொடங்கப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் மூலம் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அதிகாரப்பூர்வமான தகவல்களை டிஎன் அலர்ட் ஆப் எனும் செயலி வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(அக்.05) தெரிவித்தார்.
தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தருகிறார். தொடர்ந்து நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கடையம் அருகே உள்ள கோவிந்த பேரி ZOHO மென்பொருள் நிறுவன ஸ்ரீதர் வேம்பு பண்ணை வீட்டில் தங்குகிறார். இதனால் இன்று கடையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 7 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. போட்டியானது வாரம் தோறும் நடத்தப்படும். தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(அக்.,4) அறிவுறுத்தியுள்ளார். SHARE IT.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெறலாம். http://www.tnsevai.tn.gov.in என்ற இணையதளத்தில் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(அக்.,4) தெரிவித்துள்ளார். SHARE IT.
அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களின் உத்தரவுப்படி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம் இன்று(அக்.05) நடைபெற உள்ளது. இதில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆலங்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ் நேற்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று(அக்.04) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை தென்காசி எஸ்பி சீனிவாசன் வெளியிட்டுள்ளார். மாவட்ட பகுதிகளில் போலீசார் உதவி தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் தென்காசி, குத்துக்கல்வலசை, செங்கோட்டை ஆகிய கிளைகள் இணைந்து நடத்தும் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நாளை(அக்.05) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தென்காசி பத்மம் தியேட்டர் பின்புறம் உள்ள M.K.V. கந்தசாமி நாடார் கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.தொழில் முனைவோர்கள், விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தென்காசி மாவட்டத்தில் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் 6 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் அல்லாத குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் பராமரிக்க இயலாத குழந்தைகளை வளர்க்க விருப்பமுள்ள வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.