India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அணைப் பிரிவு, ஆயிக்குடி ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், தென்காசி, கருப்பாநதி அணை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு கிராமத்தில் தோப்பு காவலாளியாக வேலை செய்து வந்த கேரளா பத்தனபுரத்தைச் சேர்ந்த உதயன் (50) என்பவர் இன்று காலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாக புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து, வல்லம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புளியங்குடி இந்திரா காலணியில் மது பாட்டில்கள்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த புளியங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராமையா மகன் கார்த்தி (22) என்பவரை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூபாய் 18000 மதிப்புள்ள 92 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடுகிறார். அவருக்கு தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு இன்று 12ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து பேசும்போத, இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் மோடியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தல் என்று பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி, சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் முடித்துக்கொண்டு திரும்பியபோது , தென்காசி கரட்டுமலை சோதனைச்சாவடியில் உதயநிதி காரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தென்காசிக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே. கமல்கிஷோர் பணி ஒதுக்கீடு செய்தார்.
சங்கரன்கோவிலில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்களிடம் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையிலான அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.