India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை, தமிழக முதல்வரை நேரில் சென்று விமான நிலையத்தில் புத்தகத்துடன் வரவேற்றார். தமிழக முதல்வர் தூத்துக்குடி குமரி மாவட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறார் மேலும் வள்ளுவர் 25ஆவது வெள்ளி விழாவை கொண்டாடும் நோக்கில் அவரது பயணம் அமைந்தது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(டிச.28) இரவு வந்த காட்டு யானை கூட்டங்கள் பத்து தென்னை மரத்துக்கு மேல் சேதப்படுத்தி சென்றுள்ளது. இதுவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120 தென்னை மரங்கள் அந்த பகுதியில் முற்றிலுமாக சேதமானது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் நேற்று(டிச.28) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைத்தல், தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், இணையவழியாக ஆய்வு ஒதுக்கீடு செய்யப்படுவது சம்மந்தமாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் வரும் 31ம் தேதி 11.30 மணிக்கு தென்காசி ரோஸ் மஹாலில் நடக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் (டிச.29) காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி SP சீனிவாசன் இன்று(டிச.28) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பிரபாகரன் என்பவர் பெயரில், பணியிலிருந்து விடுவிக்க கோரும் மனுவும், தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவிவந்தது. இது தொடர்பாக ஏடிஎஸ்பி ரமேஷ் மூலம் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைதளங்களில் மேற்படி காவலர் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது” என தகவல்
தென்காசி அருகே உள்ள கடையநல்லூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோழிகளை மலைப்பாம்பு விழுங்கியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பின்னர் இந்த பாம்பை மலைப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (டிச.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் பிரபாகர் என்பவர். இன்று தனது பணியை ராஜினாமா செய்து கடிதம் ஒன்றை காவல்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார். அதில் போலீசாருக்கு உயிர் பாதுகாப்பு இல்லை எனவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இக்கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(டிச.27) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,“தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி, வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படுகிறது; தேவைப்படுபவர்கள் 7904025547 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் 16 நாள் கடந்தும் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் குளிக்க இன்னும் தடை தொடர்கிறது. இவற்றை வனத்துறை சரி செய்வதா, பொதுத்துறை சரி செய்வதா என்ற குழப்பம் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.