India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளை (31.12.2024)காலை 08.30 மணி அளவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி அணையில் தண்ணீரை மாவட்ட ஆட்சித் தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைக்க உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (டிச.30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (30.12.2024) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
கடையநல்லூரில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் கலந்து கொண்ட 412 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 74.25,85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 79 அடி ,72 அடி முழு கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.26 அடி ,132.22 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் நியமனம். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக திருச்சி சிட்டி டெபுட்டி கமிஷனராக பணியாற்றும் அரவிந்த் நேற்று(டிச.29) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (டிச.29) இரவு 10 மணி முதல் (டிச.30) காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை இன்று(டிச.29) தென்காசி முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் சேர்ந்தமரம் கிளை கழகச் செயலாளர் கே.ஆர்.பி. முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜன 5ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நெடுந்தூர ஓட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (டிச.29) தெரிவித்துள்ளார். SHARE IT
தென்காசிக்கு வருகை தந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (டிச.29) தென்காசி பண்பொழி பகுதிகளில் ஆய்வு செய்தார். தென்காசி வருகை தந்த அமைச்சரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வரவேற்றார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.