India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அ. சேவியா் தாஸை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (ஏப்.8) காரைக்குடி கழனிவாசல் அருகேயுள்ள என்.ஜி.ஓ குடியிருப்பு பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். இதில் முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், ஆா்பி.உதயகுமாா், சிவகங்கை தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோா் பங்கேற்கின்றனா்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், அஞ்சல் வாக்குகளை சேவை மையத்தில் செலுத்தலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து அலுவலர்களும் வாக்களிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வாக்குச் சாவடிகளுக்கு வர இயலாத முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது வீடுகளிலேயே சனிக்கிழமை அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்றது.சிவகங்கை பகுதியில் நடைபெற்ற அஞ்சல் வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் பாா்வையிட்டாா்.இந்த ஆய்வின் போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் (சிவகங்கை) விஜயகுமாா், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு ப.சிதம்பரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்து குறைக்கப்படும். ஏழை மக்களிடம் வரி வசூல் செய்யப்படுகிறது இந்த அரசு எனவும் தெரிவித்தார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 145 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை காலை 10மணியளவில் வாகனப் பேரணி செல்கிறார். பின்னர், பகல் 12 மணிக்கு தென்காசியிலும் , மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலும் அமித் ஷா தலைமையில் வாகனப் பேரணி செல்ல இருப்பதாக தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் 268 ஆண்கள், 253 பெண்கள் உள்பட 521 பேரின் பெயா்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, 1,14,124 ஆண் வாக்காளர்களும், 1,20,060 பெண் வாக்காளா்களும் , 5 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,34,189 வாக்காளா்கள் உள்ளனா். ஆலங்குடி தொகுதியில் 198 ஆண் வாக்காளா்கள்,186 பெண் வாக்காளா்கள் உள்பட 384 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணாச்சல பொய்கை பகுதியில் முட்டாக்குண்டு ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. தற்பொழுது நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர்கள் கலந்து ஊரணி உள்ளே செல்லுகிறது. இதை சுற்றி பள்ளிக்கூடம், கோவில், பள்ளிவாசல் மற்றும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் என அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.