India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், தங்களது அஞ்சல் வாக்கினை செலுத்துவதற்கு ஏதுவாக வரும் நாளை வரை சிறப்பு அஞ்சல் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து கழகத்தினரால் சிவகங்கை திறந்த வெளி விளையாட்டரங்கத்தில் ஜூனியா் பிரிவுக்கான (18வயதுக்கு கீழ்) முன்னோட்டத் தோ்வு நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். தேர்வான மகளிர் அணிக்கு ஏப்.,23, 27 வரையும், ஆடவர் அணிக்கு ஏப்.,28, மே.2 வரையும் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
சிவகங்கை மாவட்டத்தில் ஏப்ரல் 14,15,16 ஆகிய மூன்று நாட்களில் பூஜ்ஜிய நிழல் நிகழ்வானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறித்த நேரத்தில் நடைபெற உள்ளது. சூரிய கிரகணம், சந்திரகிரகணம், சூரியனில் கருப்பு புள்ளிகள், வெள்ளி நகர்வு, பூஜ்ஜிய நிகழ்வு எனத் தொடரும் பல்வேறு வானியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் இயக்க கிளைச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி கடந்த மார்ச்மாதம் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000 EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை, மானாமதுரை ஒன்றியம் முத்தநேந்தலில் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மார்ச்.28 ஆம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகேசன் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடரந்து குற்றவாளிகளை தேடி வந்தநிலையில் நேற்று இதுகுறித்து நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நேற்று இரவு 8 மணிக்கு
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்தி ப சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “தமிழ்நாட்டின் உரிமைகளை பறி கொடுத்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி துணையாக இருந்தார்” என பட்டியலிட்டு தெரிவித்தார்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டனூர், புதுவயல், சாக்கவயல் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன. அதனால் அவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.
சிவகங்கை மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சிவகங்கையில், சிங்கம்புணரி பகுதியில் 4 சென்டி மீட்டர் அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று சிவகங்கையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் சிவகங்கையில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகைகுளம் பகுதி ஆற்றுப்படுகையில் முதுமக்கள் தாழி, இரும்பு எச்சங்களை வரலாற்று பேராசிரியர் கண்டறிந்தார். மேலும், இதுகுறித்து பேராசிரியர் பாலசுப்பிரமணியன், “இங்குள்ள ஆற்றுப்படுகையில் 20 ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி மண்ணின் மேற்பரப்பில் குவியல் குவியலாக காணப்படுகின்றன. இவை சுமார் 2,600 முதல் 4000 ஆண்டிற்கு மேற்பட்டது” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.