India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராகினிப்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (19) தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள கல்லூரிக்குப் போவதாக கூறிச் சென்று சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை என அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்று சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கில் மருதிப்பட்டியை சேர்ந்த சந்திரன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவகங்கை எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் அடிப்படையில், இராமநாதபுரம் மாவட்ட சிறையிலிருந்த சந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றதாக எஸ்பி தெரிவித்தார்.
சிவகங்கையில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. தடகளம், கால்பந்து, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.1ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார் .
சிவகங்கை அரசு மருத்துவமனை அருகேயுள்ள தனியார் ஹோட்டல் அருகில் ஆதரவற்ற 70வயது முதியவர் சாலையில் செல்வோரிடம் யாசகம் கேட்டு கொண்டிருந்ததை பார்த்த ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திரன் முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முதியவர் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என திருப்பத்தூர் எம்எல்ஏவும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று(ஏப்.26) செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், ஜூன் 4க்கு பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரியதர்ஷன்(12). இவர் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். இவர் நண்பர்களுடன் பெரும்பச்சேரி கீழத்தெரு ஊரணியில் குளித்த போது பிரியதர்ஷன் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி, நேற்று காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். தொடர்ந்து நடந்த மஞ்சுவிரத்தில் மாடு முட்டியதில் மடக்கரைப்பட்டியை சோ்ந்த வெள்ளைச்சாமி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று(ஏப்.25) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொழுவிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை காளையா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.
கர்நாடகா, கேரளாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் 04575-240521 என்ற எண் வாயிலாக புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.