India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (21.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம், கீழகண்டனி பகுதியில் உள்ள பண்ணை மாரிமுத்து மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கல்லூரி சிறப்பு கல்விக்கடன் முகாம் 23.02.2026 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இந்த கல்லூரி சிறப்பு கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திருச்சியில் நடைபெற்று வரும் மாநாட்டில் சீமான் அறிவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடுபவர்களின் விவரம்,
1. காரைக்குடி – சீமான்
2. திருப்பத்தூர் – இரம்யா மோகன்
3. மானாமதுரை – ம.சண்முகப்பிரியா
4. சிவகங்கை – இந்துஜா ரமேஷ்

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட நாதக முடிவு செய்த நிலையில் இன்று அக்கட்சியின் 234 வேட்பாளர்களையும் திருச்சியில் நடைபெறும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 -ல் சீமான் அறிவித்து வருகிறார். அதில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சீமான் தனது சொந்த மாவட்டத்தில் களமிறங்குவது இதுவே முதல்முறை..!

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர், மருதுசகோதரர்கள் குறித்த காணொலிக் காட்சியினை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்ட மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.

சிவகங்கை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.