Sivagangai

News February 21, 2026

சிவகங்கை: விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் பலி.!

image

முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவவீரர் கண்ணன்.‌ இவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. விடுப்பில் ஊருக்கு வந்த அவர் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ராமலிங்கம்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பைக்கில் மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கார் அவர் மீது மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 21, 2026

சிவகங்கை: நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

image

செண்பகம்பேட்டையைச் சேர்ந்த கருப்பாயி (வயது 78), வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் ஊருணி பகுதிக்கு சென்றது தெரிந்தது. தீயணைப்பு துறையினர் ஊரணியில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார். கீழச்சீவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 21, 2026

சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், அரசனூர் துணை மின்நிலையத்தில் இன்று (பிப்.21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் உட்பட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News February 20, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (20.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

சிவகங்கை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா.?

image

சிவகங்கை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News February 20, 2026

சிவகங்கை: சிலிண்டர் புக் செய்ய புதிய அறிவிப்பு!

image

சிவகங்கை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News February 20, 2026

சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க

image

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <>க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

BREAKING: காரைக்குடியில் போட்டியிடும் சீமான்

image

நாதக தொடங்கிய 2010-ம் ஆண்டு முதலே அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் 234 வேட்பாளர்களையும் நாளை திருச்சியில் நடைபெறும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 -ல் சீமான் அறிவிக்கவுள்ளார். அதில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காரைக்குடி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

error: Content is protected !!