India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு இரண்டு கட்டங்கள் பயிற்சி நிறைவு பெற்றுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நடைபெற்றுக் வருகிறது. எனவே நீச்சல் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் உரிய பயிற்சித்தொகையினை செலுத்தி கற்றுக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் பொதுமக்கள் உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீர் கடைகளை தேடி வருகிறார்கள். இதனால் இளநீர் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இளநீர் திருப்புவனம் சாலையோர கடைகளில் ஒரு இளநீர் 70ரூபாய்க்கும், செவ்விளநீர் 80 ரூபாயக்கும் விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகுகிறார்கள் .
சிவகங்கை மாவட்டத்தில் 13 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம் மே 10 -ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காரைக்குடி அழகப்பா உடற்கல்வித் துறை ‘பி ’ வலைப்பயிற்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் வயது வரம்பு 13 வயது முதல் 19 வயது வரை மட்டுமே. மேலும் விவரங்களுக்கு 7010325125 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. கீழையப்பட்டி , துலாவூா் , குன்றக்குடி, நாச்சியாபுரம், கொரட்டி, தட்டட்டி என சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 5000-க்கும் மேற்பட்டோா் இந்த மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பன்னிரண்டு வகுப்பு தேர்வில் மாநில அளவில் 97.42% இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வை மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.
சிங்கம்புணரி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் அப்பகுதி விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் பாலாற்றங்கரை அருகே உள்ள ஒரு மின்கம்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் சாய்ந்தது. இன்றுவரை சரிசெய்யப்படாமல் அப்படியே ஆபத்தான முறையில் தொங்குகிறது. விபத்துக்கள் ஏற்படும் முன் மின்சாரத் துறையினர் அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மாலை 6.30 மணி வரை இடி, மின்னலுடன் மிதமானக் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுற்றித்திரியும் கோயில் மாடுகளை பிடிக்க மதுரை கோயில் நிர்வாகம், தன்னார்வ அமைப்பினர் மறுத்து விட்டதால் சிக்கல் உருவாகி உள்ளது. திருப்புவனத்தில் நாளுக்கு நாள் கோயில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்துவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.