India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக ஜூன்.21 ஆம் தேதி திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கம்புணரியில் 7 செ.மீட்டரும், திருப்பத்தூரில் 5 செ.மீட்டரும், காரைக்குடியில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று அண்ணாமலையின் பிறந்தநாள். அதற்கு எனது வாழ்த்துகள். அண்ணாமலை அரசியல் உண்மைகளையும், தனது உயரத்தையும் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் படுதோல்வியை சந்தித்துள்ளார் என்று கார்த்திக் சிதம்பரம் கூறினார்
சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 506 மதுபாட்டில் மற்றும் ரூபாய் 8830 பறிமுதல் செய்து முருகேசன், சிவராஜன், ராஜா, கருப்பையா, ஆறுமுகம் ,முருகானந்தம், வைரவன் ஆனந்தகுமார் உட்பட 24 நபர்களை கைது செய்தனர்.
2024–25ம் கல்வியாண்டிற்கான தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்வு செய்யப்படும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000வழங்கப்படும்.
www.dge.tn.gov.in விண்ணப்பத்தினை ஜூன்11 முதல் 26 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஜூன் 26ம் தேதி மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகிலுள்ள உள்ள மருது பாண்டியர் பூங்காவில் நகர்மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் நடைபெற இருக்கின்ற கோடை திருவிழாவை முன்னிட்டு அங்கு செய்யப்பட்டிருக்கும் முன் ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார். அங்கு உள்ள மின்விளக்கு, வாட்டர் சப்ளை ஆகியவற்றை இயக்கி பார்த்தார். அப்போது மின்விளக்குகள் வாட்டர் லைன்கள் சிறப்பாக ஒளிர்ந்தது.
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூன்.7ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100% வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், 5-வது சுற்று கால் நோய் மற்றும் வாய் நோய் கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக ஜூன்.10 ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்கள் வரை சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துறை ரீதியாக வருகை புரிந்து, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்களால் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் விருது பெறுவதற்கு தகுதிகளையுடைய நபர்கள் தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் – 4,27,677 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் – 2,22,013 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் – 1,95,788 வாக்குகள்
*நாதக வேட்பாளர் க.மனோஜ்குமார்- 1,63,412 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.