India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை காரணமாக பச்சை மிளகாய் வரத்து குறைந்து கொண்டே இருப்பதால், மார்க்கெட்டில் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் காரைக்குடி மார்க்கெட்டில் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது . ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது. சுபமுகூர்த்தம், விசேஷ தினங்களால் இன்று மேலும் விலை வரை செல்ல வாய்ப்புள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா அன்று
இந்திய அரசாங்கத்தால் மேன்மை பொருந்திய பணிகளுக்காக வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு (பத்ம விபுஷன் , பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) தகுதியுடையவர்கள் awards.gov.in மற்றும் padmaawards.gov.in தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் காங்., வெற்றிக்கு அதிக ஓட்டுகளை பெற்று தந்து அமைச்சர் பெரியகருப்பனின் திருப்புத்துார் தொகுதி, கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்கு ‘கை’ கொடுத்துள்ளது. சிவகங்கை தொகுதியில் காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4,27,677 ஓட்டுக்களை பெற்று 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கார்த்திக்கு அதிக ஓட்டு கிடைத்த சட்டசபை தொகுதி பட்டியலில் திருப்புத்துார் தொகுதி முதலிடம் பிடித்துள்ளது.
சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை சேவைகள் வழங்கும் வரும்.ஜூன் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக மாவட்ட வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
சிவகங்கை வியான்னி அருட்பணி மையத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை IV-கீழ், விவசாயிகளுக்கான இடைமுக பணிமனை நிகழ்ச்சியினை, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில்
நேற்று காலை முதல் கன மழையின் அளவுகள் சிவகங்கை-24. 00மி. மீ மானாமதுரை 60.00மி.மீ இளையான்குடி-36. 00மி. மீ, திருப்புவனம்-40. 60மி. மீ, திருப்பத்தூர்-2. 50மி. மீ,
காரைக்குடி-6.80 மி.மீ, தேவகோட்டை -25.0மி.மீ, காளையார்கோவில்- 26.40மி.மீ, சிங்கம்புணரியில்-மழை பெய்ய வில்லை மொத்தம் 221.30 மி.மீ மழை சிவகங்கை மாவட்டத்தில் பெய்துள்ளது.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார் . இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வனத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைக்குடி போக்குவரத்து நகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் மாலதி(57). இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று(ஜூன்.05) வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் திருடுபோய் இருந்தன. இதுகுறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு 2ஆவது முறையாக காா்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதையடுத்து, இங்குள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின் நகா் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் மகேஷ்குமாா், பிரியங்கா சிதம்பரம், ஆகியோர் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.