Sivagangai

News June 12, 2024

வாளை காட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது

image

தல்லாகுளம் முனியாண்டி கோவில் பகுதியில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (32) நின்று கொண்டிருந்தபோது கீழமேல்குடி பகுதியை சேர்ந்த ராகேஷ்(19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் தட்சிணாமூர்த்தியை வாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ.300 பறித்து சென்றதாக தட்சிணாமூர்த்தி மானாமதுரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து இன்று விசாரித்து வருகின்றனர்.

News June 11, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்ட விதிகளின்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

காரைக்குடி சந்தையில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு

image

காரைக்குடி காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறி தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.110 உயர்ந்து நேற்று ரூ.150க்கும், ரூ.80 க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ.120க்கும், உருளைக்கிழங்கு ரூ.44, சின்ன வெங்காயம் ரூ.70, கத்தரி ரூ.40, வெண்டை ரூ.40, முருங்கைக்காய் ரூ.60, தக்காளி ரூ.35, பீர்க்கங்காய் ரூ.80 குடைமிளகாய் ரூ.80, இஞ்சி ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News June 11, 2024

அரசு விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது

image

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி / பாலிடெக்னிக் / ஐடிஐ ஆகியவைகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்
மற்றும் சிறுபான்மையினர் மாணவ மற்றும் மாணவியர்களுக்கான அரசு விடுதிகளில் சேருவதற்கு, தகுதிகளின் அடிப்படையில் ,மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்

News June 11, 2024

மருத்துவ சான்றிதழினை பதிவேற்றம் செய்யலாம் -ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே, சாரதி மென்பொருளை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்களுக்கான 
மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக  பதிவேற்றம் செய்ய இயலும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (ஜூன் – 10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகப் பகுதியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, சங்க நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

News June 10, 2024

மக்கள் தொடர்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

image

இளையான்குடி வட்டம், சூராணம் உள்வட்டம், வல்லக்குளம் கிராமத்தில், வரும் ஜூன். 12ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

சிவகங்கையில் 1908 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

image

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11 மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 1804 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 62ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1,908 வழக்குகள் நேற்று முடிக்கப்பட்டது.

News June 10, 2024

நடந்து சென்றவரை தாக்கியதால்  பரபரப்பு

image

தெற்குசந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கணேசன் (40).இவர் கீழ் மேல்குடி பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது கீழ் மேல்குடி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார்,சந்தோஷ், ஏ விளக்குளம் பகுதியைச் சேர்ந்த, புலிப்பாண்டி, ஆகியோர் கணேசனை வழி மறித்து சாதியை சொல்லி அவதூறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்விடுத்ததாக3பேர் மீது டிஎஸ்பி கண்ணன் வழக்கு பதிவு செய்து இன்று விசாரித்து வருகிறார்.

News June 9, 2024

சிவகங்கை: 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில்
காவல்துறையில் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாக 10 ஆண்டு, முதல்நிலை போலீசாக 5 ஆண்டுகள், தலைமை போலீசாக 10 ஆண்டு என 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும் ஏட்டுகள் 39 பேருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3 பேர் என 42 பேர் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
டிஐஜி துரை பதவி உயர்வு வழங்கினார்.