Sivagangai

News June 14, 2024

வருவாய் தீர்வாய நிகழ்ச்சி – ஆட்சியர் தகவல்

image

1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் வரும் 18-ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். அதன்படி, 21-ம் தேதி மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் ஆகிய வட்டங்களிலும், 25-ம் தேதி தேவகோட்டை, காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய வட்டங்களிலும்  நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News June 14, 2024

சிவகங்கை: கைதி தப்பி ஓட்டம் – வலைவீசும் போலீஸ்

image

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபால் (29) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரை கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்தநிலையில், சிறையில் இருந்த கோபால் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர். 

News June 14, 2024

சிவகங்கை: ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் 

image

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நேற்று (ஜூன் 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News June 14, 2024

முகத்தில் மிளகாய் பொடி வீசி வழிப்பறி

image

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மதுபான கடையில் 7661 சேல்ஸ்மேனாக பணிபுரியும் முருகானந்தம்(50) தினகரன்(46) இருவரும் இன்று வழக்கம் போல பணத்தை வங்கியில் செலுத்த சென்ற பொழுது டாஸ்மாக் கடையின் அருகே அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஊழியர்களை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூபாய் 2 லட்சத்து 67 ஆயிரத்தையும் பணத்தையும் செல்போனையும் பறித்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

News June 14, 2024

சிவகங்கை:திணறும் அம்மா உணவாக ஊழியர்கள் 

image

காரைக்குடி:சுப்பிரமணியபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.முக்கிய இடங்களுக்கு மத்தியில் அம்மா உணவகம் அமைந்துள்ளதுஉணவகத்தில் உரிய நேரத்திற்கு உணவு கிடைக்காததால் பணியாளர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.உணவகத்தை பராமரிக்க முடியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன

News June 13, 2024

ஜவுளித்துறையில் பயிற்சி பெற வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற விருப்பமுள்ளவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 13, 2024

விழிப்புணர்வு குறும்படம் – பரிசுத்தொகை வழங்கிய ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு குறும்பட போட்டியில் பங்கேற்று முதல் மட்டும் இரண்டாம் இடங்களை பிடித்த நபர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று (ஜூன் 13) வழங்கினார்.

News June 13, 2024

நா.த.க.வை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது – பா. சிதம்பரம்

image

கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற வைத்ததற்காக கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் இன்று (ஜூன் 13) திருப்புவனம் வந்திருந்தார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது, நாம் தமிழர் கட்சியை குறைத்து மதிப்பிட்டு விட கூடாது என்றும், நமது கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

News June 13, 2024

குழந்தைத் தொழிலாளர்- முதலிடம் பிடித்த சிவகங்கை

image

சிவகங்கை குழந்தை தொழிலாளர்களை ஒழித்த வகையில் மாநில அளவில் சிவகங்கை முதலிடத்திற்கான விருதை பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை மூலம் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து ஒழித்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரணம், இழப்பீடு பெற்றுத்தருதல், குழந்தைகள் கல்விக்கு உதவுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. சிவகங்கை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து பெற்றுள்ளார்.

News June 13, 2024

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பேச்சு

image

காரைக்குடி பகுதி, நகர, ஒன்றிய காங் நிர்வாகிகளை சந்தித்த பின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், காங் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தொகுதிக்கு 5 ஆயிரம் பேரை புதிதாக காங் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இளம் வாக்காளர்கள் காங்., கட்சியை ஆதரிக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றார். வேட்பாளர் கார்த்தி வெற்றிக்கு பாடுபட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.