India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கம்புணரி ஒன்றியம் வேங்கைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கழிப்பறை கட்டப்பட்ட இடம் தனியாருக்குச் சொந்தமானது என்று புகார் கூறப்பட்டதால், கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சில மீட்டர் தூரத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டடத்தில் இயங்கும் பழுதடைந்த கழிப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் படைவீரரின் குடும்பத்தினர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
காளையார்கோவில் எஸ்.ஐ குகன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். டூவீலரில் சென்ற இருவரை சோதனை செய்ததில் துரைசிங்கம்,லட்சுமணன் மேலும் இவர்கள் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. இவ்வழக்கில் உள்ள மற்றொருவர் ஒய்யவந்தானில் பதுங்கியிருப்பதாக தெரிவித்தனர்.போலீசாரை கண்டதும் குட்டசங்கர் வாளால் எஸ்.ஐயை தாக்கி பாலத்திலிருந்து குதித்தில் கை கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிங்கம்புணரியை சேர்ந்த செல்வராஜ், சரவணன், மணிகண்டன் பஞ்சு ஆகியோர் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் எடுத்த நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்ட மனுதாரர் புகார் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு விசாரணையை ஜன.3 க்கு ஒத்திவைத்தனர்.
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், நிவாரணப் பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் நேற்று இரவு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அனுப்பி வைத்தார். உடன் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வானதி உட்பட அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்குவதற்கான கருவி(ம) புதிய மின் மோட்டார் பம்பு செட்டு கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகின்றது. இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் 9080230845 என்ற எண்ணிலும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், சாக்கோட்டை, எஸ்.புதூர் திருப்பத்தூர் 944222 5856 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள்/படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் வருகின்ற 07.12.2024 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, “குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், பருவமழை மற்றும் காலநிலை மாறுபாடுகளால், காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் அதிக உடல்வலி, சளியுடன் கூடிய இருமல், வயிற்றுவலி, சோர்வு, வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் காரணமாக உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு, நோய் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.