Sivagangai

News December 17, 2024

காளையார்கோவிலில் நீங்களும் REPORTER ஆகலாம்

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காளையார்கோவில் பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 9642422022 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.

News December 17, 2024

சிவகங்கையில் வேலை வாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை நாடும் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

சிவகங்கையில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

சிவகங்கை மாவட்டத்தில் கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் ரூ.50,000/- மானியத்துடன் ரூ.3.00 லட்சம் வரை கடனுதவிகள் பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள், மாவட்ட தொழில் மைய தலைமையிலான குழு மூலம் சரிபார்க்கப்பட்டு, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

சிவகங்கையில் நாளை மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி காரணமாக காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, புலியடிதம்பம், பள்ளித்தம்மம், சருகணி, கருமந்தக்குடி, சாத்தரசன்கோட்டை, அரசனூர், இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர்,பச்சேரி, வேம்பத்தூர்,பில்லூர், களத்தூர், ஆ.தெக்கூர், மருதிபட்டி, சூரக்குடி, எஸ்.எஸ்.கோட்ட, ஆவினிப்பட்டி சுற்று வட்டாரதில் காலை 9 முதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது.

News December 17, 2024

3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

சிங்கம்புணரி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் தினமும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்துள்ளது.டிச.15ம் தேதி அதிகாரிகள் நாட்டார்மங்கலம் அருகே ஆய்வு மேற்கொண்டனர் அதில் வேங்கைப்பட்டி குமரேசன் மகன் தினேஷ்குமார் என்பவர் டூவீலரில் 350 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை 4 மூடையில் கடத்திச் வந்தது தெரிந்தது. அவர் வீட்டில் 2800 கிலோ எடையுள்ள 40 ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

News December 16, 2024

வினாடி வினா போட்டி – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்கள், அரசு /அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் திருக்குறள் முதல் நிலை வினாடி வினா போட்டியானது டிச.21 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி ASP-யிடம் புகார்

image

நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இன்று (டிச.16) புகார் அளித்துள்ளனர். ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் தீபக் தவறான கருத்து கூறியதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபக் கருத்தை ஒளிபரப்பியதால் தனியார் தொலைக்காட்சி, தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிய கோரிக்கை

News December 16, 2024

சிவகங்கையில் புதிய பாலம் அமைக்க கோரிக்கை

image

திருப்புவனம் அருகே நையினார்பேட்டையில் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் 30 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் சூழ்நது நெல் கரும்பு வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்துவிட்டதாகவும், பைப் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் உடன் இருந்தனர்.

News December 16, 2024

ஆபத்தில் மணிமுத்தாறு தரைப்பாலம்

image

தேவகோட்டை மணிமுத்தாறு பாலத்தில் தடுப்பு துாண்கள் உடைந்த நிலையில் நேற்று முன்தினம் பாலத்தை தொட்டு தண்ணீர் ஓடிய நிலையில் இரவு முதல் உடைந்த துாண்கள் இருந்த இடமே தெரியாமலும், பாலம் தெரியாமலும் பாலத்திற்கு மேலே 1அடி உயரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 20 கிராமத்தினர் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகினர். ஆபத்தான நிலை காரணமாக போலீசார் ஆற்றின் முகப்பின் 2 புறமும் தடுப்பு அமைத்தனர்.

News December 16, 2024

திருப்புவனம் அருகே மழையால் 200 ஏக்கர் மிளகாய் சேதம்

image

திருப்புவனம் தாலுகாவில் 5 நாட்களாக மழை பெய்தது. பழையனுாரில் சாகுபடி செய்திருந்த மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.நடவு செய்யப்பட்ட மிளகாய் செடி தற்போது பூ பூக்கும் பருவத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். மழை காரணமாக மிளகாய் பயிர் முற்றிலும் பாதிக்கும் நிலையில் உள்ளது.

error: Content is protected !!