Sivagangai

News December 21, 2024

காரைக்குடி-சென்னை ரயில் இயக்க கோரிக்கை

image

காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்குடி வந்து சென்ற காரைக்குடி மயிலாடுதுறை தினசரி பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், காரைக்குடி மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிதாக ரயிலும், ராமேஸ்வரம் சென்னைக்கு பகல் நேரத்தில் இன்டர்சிட்டி ரயிலையும் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News December 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி

image

சிவகங்கை ரயில்வே கோட்ட அலுவலர் இன்று (டிச.20) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் சலுகை அட்டை வழங்குவதாகவும் இதற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://divyangjanid.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்தால் பரிசீலனைக்குப் பிறகு சலுகை அட்டை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

News December 20, 2024

ராமேசுவரம் – ஹூப்ளி ரயில் சிவகங்கையில் நிற்கும் 

image

ராமேசுவரம் – ஹூப்ளி – ராமேசுவரம் சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 20, 2024

சிவகங்கையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. காலை 9 முதல் 5 மணி வரை சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தாவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, பாப்பாகுடி, திருப்புத்தூர்,பிள்ளையார்பட்டி, தென்கரை,எஸ்எஸ்கோட்டை,சிங்கம்புணரி, ஒடுவன்பட்டி, என்பீல்ட் நகர், கருப்பூர், பிரான்மலை,வையாபுரிபட்டி இவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை.

News December 19, 2024

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இணைய ஆட்சியர் அழைப்பு

image

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு திட்டத்தில் இணைவதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மருத்துவ சேவைகளை கட்டணமில்லாமல் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள எண் பெறுவதற்கு சிவகங்கை மாவட்ட அரசு சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

போராட்டக் களமான சிவகங்கை மாவட்டம்

image

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக தமிழ்நாடு முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சாக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது.

News December 19, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ,பொட்டப்பாளையம், திருப்பாச்சேத்தி, கீழடி ஆகிய
துணை மின்நிலையத்தில் நாளை(டிச.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*ஷேர்*

News December 18, 2024

சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் ரூ.12,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பெண் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களை நேரிலோ அல்லது மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை 630561 என்ற முகவரிக்கோ 24ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என ஆட்சியர் இன்று (டிச.18) தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்

image

சிவகங்கை மாவட்டத்தில் கைவினை கலைஞர்களை தொழில் முனைவோராக்கும் முயற்சியாக அரசு ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் குடும்ந தொழில் மட்டுமின்றி 25 விதமான கைவினை கலைகள் மற்றும் தொழில்கள் ஈடுபட்டுள்ளவர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அனுகலாம்.

News December 17, 2024

பொதுப்பணித்துறையினரிடம் திமுக மா.து.செ முறையீடு

image

திருப்புவனம் நரிக்குடி சாலையின் மேற்கே நயினார் பேட்டை கண்மாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நயினார் பேட்டையில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிட்ட கரும்பு, நெல், வாழை சேதமடைந்தது.  இதனை அறிந்த சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் சேங்கைமாறன் உடனடியாக அந்த தண்ணீரை அடைப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் முறையிட்டார். அப்போது திருப்புவனம் ஒன்றிய நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!