India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலமாகவும் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீஷியன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயன்பெற விருப்பம் உள்ள நபர்கள்https://www.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் தகவல்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி ஏற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற எஸ்பிக்கு காவலர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆஷிஷ் ராவத் இதற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால் மற்றும் வாணியங்குடி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. மேற்காணும் ஊராட்சியின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு போன்ற விவரங்களின் அடிப்படையில் அவற்றின் வளர்ச்சியினை கருத்திற்கொண்டு, மேற்காணும் ஊராட்சி சிவகங்கை நகராட்சியுடன் விரிவாக்கம் தொடர்பான அரசாணையை செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அறிவுறுத்தப்படப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 5,95,261 ஆண் வாக்காளர்களும், 6,19,673 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 12,14,997 வாக்காளர்கள் உள்ளனர் என இறுதி வாக்காளர் பட்டியல் 2025-ஐ, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார்.
மானாமதுரை வெள்ளையன் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் நாகு இவரது வீட்டில் ஏராளமான செடிகள் வளர்த்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் பிரம்ம கமலம் பூச்செடியையும் வாங்கி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் முதன்முதலாக அச்செடியில் பூ பூத்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அச்செடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை தாவரமாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பற்றி வால்போஸ்டர் ஒட்டப்பட்டது. அது குறித்து எஸ்.பியிடம் அதிமுகவினர் புகார் மனு அளித்தனர். அது சம்பந்தமாக இன்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் மீது கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு மாவட்ட கழக செயலாளர் கேஆர். அசோகன் தலைமையில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கழக நிர்வாகிகள் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிறுவத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் கணக்குகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, சிறுவத்தி ஊராட்சி மன்ற தலைவர் சத்திய போஸ் அவர்களை இன்று(ஜனவரி 4) சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் பாராட்டி சான்றிதழ் மற்றும் விருதை வழங்கினார். உடன் மற்றும் பலர் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 23.01.2025 அன்று மானாமதுரை வட்டத்தில் நடைபெற உள்ளது. அதில் ஜன.08 முதல் ஜன.20 வரை மானாமதுரை வட்டத்திற்குட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துரை சேர்ந்த முத்துலட்சுமியும், அவரது மகன் கோபியும் இன்று டூவீலரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்துள்ளனர். புளியால் அருகே சிலேமேகநாடு என்ற இடத்தில் வரும்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் தாயும் மகனும் கீழே விழுந்ததில் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தேவகோட்டை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அகில இந்திய சைனிக் பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/- என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 13.01.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.