Sivagangai

News January 28, 2025

பேராசிரியர்கள் கல்லூரி முன்பு போராட்டம்

image

பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் ரூபாய் 57,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முனைவர் ரமேஷ் தலைமையில் இன்று (ஜன.28) வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் அவசியம் குறித்து முனைவர் பரமானந்தம் விளக்கவுரை ஆற்றினார். இதில் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

News January 28, 2025

முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினரின் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் /இராணுவப் பணியின்போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் வருகின்ற 05.02.2025 தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

விடுமுறை அளிக்காத 238 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 238 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க மதுரை கூடுதல் கமிஷனர் உமாதேவி பரிந்துரைத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 94 நிறுவனங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 59 நிறுவனங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 35 நிறுவனங்களும், ராமநாதபுரத்தில் 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.உங்க நிறுவனத்தில் லீவ் விடப்பட்டது என்பதை கமெண்ட் பண்ணுங்க

News January 28, 2025

அரசு பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் 

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பத்தரசன்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா வயது 14. காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மின்சாரம் தாக்கி ஜன. 24 அன்று உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலியானதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கியதால் ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.

News January 27, 2025

அமைச்சர் ராஜகண்ணப்பன் வழக்கு – நீதிமன்றம் மறுப்பு

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ராஜ கண்ணப்பன் பிரசாரம் செய்தார். தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரசாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க நீதி மன்றம் மறுத்துள்ளது.

News January 27, 2025

பஸ் பின்னால் பாறாங்கல்லுடன் சென்ற நடத்துனர்

image

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி வண்ணாரிருப்பு மலைப் பாதையில் நேற்று அரசு பேருந்து ஏறிய போது டிரைவர் பிரேக் அடித்தும் நிற்காமல் சென்றதால் பின்புறம் வருவதை அறிந்த நடத்துனர் பயணிகளை காப்பாற்றுவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்துக்கொண்டு முட்டுக்கொடுப்பதற்காக பேருந்து பின்புறம் நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

News January 27, 2025

மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

image

சிவகங்கை பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா (20). கல்லூரி மாணவரான இவா், கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்தாா். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் அந்த மாணவி கா்ப்பமானாா். இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆதித்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 26, 2025

384 அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கிய ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 17 பயனாளிகளுக்கு ரூ.30.83 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 60 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கமும், சிறப்பாக பணிபுரிந்த 45 காவலர்களுக்கும் அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 384 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார்

News January 25, 2025

சிவகங்கை மக்களே உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) சிவகங்கை மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

News January 25, 2025

விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி,நெல் அறுவடை இயந்திரம் சொந்தமாக வைத்துள்ள உரிமையாளர்களின் விவரபங்கள் மற்றும் தொலைபேசி எண்களை நேரடியாக தொடர்பு கொண்டு, இடைத்தரகர்கள் இன்றி அறுவடை இயந்திரங்களை பெற்று பயன்பெறலாம். விவசாயிகள் கூடுதலாக வாடகை வசூல் செய்யப்படுவது தொடர்பான புகார்களை,வருவாய் கோட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!