Sivagangai

News September 21, 2024

சிவகங்கை:திருமணம் முடிந்த 10 நாளில் மனைவி பலி கணவர் தற்கொலை முயற்சி

image

தேவகோட்டை வளங்காவயலை சேர்ந்த ராமையா துபாயில் வேலை செய்கிறார். இவருக்கும் பரின்வயல் கிராமத்தை சேர்ந்த முத்துமணிக்கும் 10 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.செப்.18 வளங்காவயலிருந்து பரியன்வயல் மாமனாருக்கு வீட்டுக்கு சென்ற போது தலையில் காயம் ஏற்பட்டு முத்துமணி இறந்தார். நேற்று முன்தினம் இரவு மனைவி இறந்த கவலையில் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 20, 2024

காரைக்குடியில் உயர்படிப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023 -24ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப்படி முகாம் செப்.25ஆம் தேதி கரைக்குடி அழகப்பா பல்கலை., நடைபெற உள்ளதால், கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

திருப்பத்தூரில் மருது சிலைகளுக்கு சீமான் மரியாதை

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்காக இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை புரிந்தார். கூட்டத்திற்கு முன்பாக திருப்பத்தூரில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருது பாண்டியர்களின் மணிமண்டபத்திற்கு சென்று மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

News September 20, 2024

மானாமதுரையில் தப்ப முயன்றவருக்கு மாவு கட்டு

image

மானாமதுரை அருகே இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் தொடர்புடையதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த வில்வக்குமார் (25), முத்துக்குமார் (26), ராமசாமி (24), அஜய்குமார் (19), தவமுனியசாமி (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதில் முத்துக்குமார் மற்றும் வில்வக்குமார் போலீசாரை பார்த்து தப்ப முயன்றபோது கால் தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 20, 2024

இராணுவ கல்லூரிக்கு விரைவில் விண்ணப்பிய்யுங்கள்!

image

சிவகங்கை மாவட்டம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜீலை 2025 பருவத்திற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் 30ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.19) தெரிவித்துள்ளார். தேர்வு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

News September 19, 2024

சுய தொழில் செய்திட மானியம் – ஆட்சியர் அழைப்பு

image

சிவகங்கை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் (ம) பேரிளம் பெண்கள் ஆகியோர்கள் சுயதொழில் செய்திட ரூ.50,000 மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் இளையான்குடி வட்ட அளவில், அரசு அலுவலகங்களில் ஆய்வு மற்றும் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளும் மேற்கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 04.00 மணியளவில் இளையான்குடி வட்டம், சிவன் கோவில் அருகில் M.M. திருமண மஹாலில் மனுக்களை பெற உள்ளார்.

News September 18, 2024

சிவகங்கையில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது யூரியா 4600 மெட்ரிக் டன், டிஏபி 988 மெட்ரிக் டன், பொட்டாஷ் 455 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2072 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 360 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது என வேளாண்மை இணை இயக்குநர்(பொ) லட்சுமி பிரபா இன்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) பரமேஸ்வரன் மற்றும் சிவகங்கை டான்பெட் மண்டல மேலாளர் ஜீவா உடனிருந்தனர்.

News September 17, 2024

விதை நேர்த்தி செய்து விதைத்து பயன்பெறலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்கள், விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்திடல் வேண்டும். பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உரச்செலவை குறைக்க விதை நேர்த்தி செய்து விதைத்து பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

காரைக்குடி புதிய ஏஎஸ்பி பொறுப்பேற்பு

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று (செப்.17) புதிய ஏ.எஸ்.பியாக அனிகேத் அஷோக் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்ற பின்னர் அவருக்கு காவல்துறையினர், நகரின் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.