Sivagangai

News April 10, 2026

சிங்கம்புணரியில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

image

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் திருமாறன்ஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கட்சியின் வாக்குறுதி திட்டங்களை எடுத்து கூறி பிரச்சாரத்தை மேற்கொண்டார். உடல் கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 10, 2026

BREAKING காரைக்குடியில் பேசாமல் சென்றார் விஜய்..!

image

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பேசாமல் சென்றதால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நண்பகல் 12:00 – 2:30 மணி வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் காரைக்குடி வந்தடைய 2:30 மணிக்கு மேல் ஆனதால் அவர் வேனில் இருந்தவாறு வேட்பாளரை அறிமுகம் செய்து விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இதனால் கடும் வெயிலில் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

BREAKING காரைக்குடியில் விஜய் பரப்புரை செய்வதில் தாமதம்.!

image

காரைக்குடியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக பிரச்சாரத்தில் பங்கேற்க, தவெக தலைவர் விஜய் மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி நோக்கி வந்து கொண்டிருக்கிறார். வழி நெடுகிலும் தொண்டர்கள் கூட்டம் காரணமாக, மதுரை – காரைக்குடி 100 கி.மீ தூரமுள்ள சாலையை கடக்க 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. காரைக்குடி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

News April 10, 2026

சிவகங்கை: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

BREAKING காரைக்குடி பேருந்து நிலையம் மூடல்.!

image

காரைக்குடியில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அவர் பிரச்சாரம் செய்ய இருப்பதால், பாதுகாப்பு கருதி புதிய பேருந்து நிலையம் முழுவதும் தகர சீட் கொண்டு மூடப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள், 3 கி.மீ தூரமுள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டனர். இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மானாமதுரை: ஒரு மாதம் ஆகியும் வாங்கப்படாத ஆகாஷ் உடல்.!

image

மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்பவர், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி தொடர் போராட்டம் செய்த நிலையில், அவரது உடலை வாங்க நீதிமன்றம் பெற்றோருக்கு அறிவுறுத்தியது. மதுரை GH ல் பிரேத பரிசோதனை முடிந்து ஒரு மாதமாகியும், அவரது உடல் வாங்கப்படாமல் உள்ளது. இதனால் அவரது உடலில் தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 10, 2026

காரைக்குடி வரும் தவெக தலைவர் விஜய்.!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று TVK வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் பிரச்சாரம் செய்யும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News April 9, 2026

சிவகங்கை: அடிக்கடி மின் தடையா..கவலை வேண்டாம்

image

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

error: Content is protected !!