Sivagangai

News May 31, 2024

சிவகங்கை இன்று மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

தனியார் பள்ளி வாகனங்கள் மறு சீராய்வு பணி

image

திருப்புவனம்:வரும் ஜூலை 6ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.அதைத் தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி தனியார் பள்ளிகளின் பேருந்துகளை சில நாட்களாக சிவகங்கை வட்டார போக்குவரத்துக் கழக மைதானத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் அவர்கள் மறு சீராய்வு செய்கிறார்.

News May 31, 2024

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு

image

சிவகங்கை மாவட்டநிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பணிசெய்து போது பணியிடத்தில் விபத்தினால் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகி தகவல் பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது

News May 31, 2024

கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது -ஆட்சியர் தகவல்

image

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீருந்து செய்யும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே,  சிவகங்கை மாவட்டத்தில் 31.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

வாக்கு எண்ணும் முறை குறித்த பயிற்சி

image

ஜூன் 4 அன்று காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்ளவுள்ள 102 மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் மற்றும் 126 நுண் பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு வாக்கு எண்ணும் முறைகள் குறித்த விரிவான பயிற்சி வகுப்புகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

News May 30, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

சிவகங்கை மானாமதுரையின் கடம் சிறப்பு!

image

சிவகங்கை, மானாமதுரை குலாலர் தெருவில் நான்கு தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடம் உலகளவில் இசைக்கலைஞர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து தயாரிக்கின்றனர்.

News May 30, 2024

விவசாய குழுக்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தில் அங்ககச்சான்று பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து பங்கேற்பாளர் உறுதி அளிப்பு திட்டத்தில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தரச்சான்று பெறலாம்.

News May 30, 2024

சிவகங்கை: வடமாடு மஞ்சுவிரட்டு

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நேற்று தளக்காவூர் புனித துாய ஜெபமாலை அன்னை திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது 14 மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் சீறி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து குறிப்பிட்ட நேரத்தில் அடக்கினர் இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் ரொக்க பரிசை மற்றும் நினைவு பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

News May 29, 2024

சிவகங்கை: மேலும் ஒருவன் கைது

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மே.21ஆம் தேதி நகை வியாபாரியை வழிமறித்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.

error: Content is protected !!