India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நாளில் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிங்கம்புணரியில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனடிப்படையில் வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மனுக்கு 20 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நாளை மறுநாள் (ஆக.9) சிங்கம்புணரி வட்டாரத்திற்குட்பட்ட 10 கிராமங்களுக்கு முறையூர் சமுதாயக்கூடத்திலும், தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கு சருகனி, லேவா திருமண மண்டபத்திலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.மணி வரை நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளாார்.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின் போது செந்த உட்கோட்டத்தில் பணிபுரிந்த காவலர்கள் வேறு உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் காவலர்கள் மீண்டும் பழைய உட்கோட்டங்களுக்கே இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் போலீசார் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் இடமாற்றம் கேட்டு போலீசார் எஸ்பி அலுவலகத்துக்கு அலைந்து வருகின்றனர்.
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சிவகங்கை மாணவா் தகுதி பெற்றார். வேலூர் மாவட்டம், தக்கோலம் பகுதியில் கடந்த 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரணவ் குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான 50 முதல் 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று, முதலிடம் பெற்றார். இதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் தேக்கு, மகாகோனி, செம்மரம், வேங்கை, ரோஸ்வுட் மரக்கன்றுகள் திருப்புவன வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வனச்சரக அலுவலர் அ. தாஹிர்அலி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், 5 பிரிவுகளில் மாவட்ட/மண்டல மற்றும் மாநில அளவில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், பங்கேற்க வருகின்ற 25.08.2024 ஆம் தேதிக்குள் https://sdat.tn.gov.in/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆக.9 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு, ஐடிஐ. டிம்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 881 நியாய விலைக்கடைகளிலும் ஜூலை மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.