India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதகுபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகங்கை சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதில், அவரை சொந்த பிணையில் நீதிபதி விடுதலை செய்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 400 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் 495 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,191 கிலோ கஞ்சாவை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையிலான காவலர்கள் திருநெல்வேலி தகன எரிவாயு கூடத்தில் தீயிலிட்டு எரித்தனர்.
தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக.12) காணொலி வாயிலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மாநகராட்சியாக சற்று முன் அறிவித்தார். மேலும், காரைக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் .
காரைக்குடியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலியான நிலம் கற்பக விநாயகர் நகரில் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆள் மாறாட்டம் மூலம் பவர் பத்திரம் பதிவு செய்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி சார் பதிவாளர், போலீஸ் எஸ்ஐ உட்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி உள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் ஆக:12,13,14 ஆகிய மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக நாகப்பட்டினம் விளங்கியது. காலப்போக்கில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதை முன்னிட்டு சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில்
நேற்று பெய்த மழையின் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சிவகங்கையில் 32 மி.மீ, மானாமதுரையில் 57மி.மீ, திருப்புவனத்தில் 90. 40மி.மீ, திருப்பத்தூரில் 29. 40மி.மீ, தேவகோட்டையி 2.40 மி.மீ, சிங்கம்புணரியில் 13.60 மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 224.80 மி.மீ மழை நேற்று (ஆகஸ்ட்-10)பெய்துள்ளது.
காரைக்குடி சேர்ந்தவர் நகை வியாபாரி சரவணன். இவர் மே 21ஆம் தேதி சென்னையில் இருந்து 75 பவுன் நகைகள் & 7 கிலோ வெள்ளி பொருட்களை பேருந்தில் கொண்டு வந்தார். இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் வசதிக்காக மைசூர்-காரைக்குடி சிறப்பு ரயில்(06295) மைசூரிலிருந்து ஆக. 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து – மைசூர் சிறப்பு ரயில்(06296) காரைக்கு ஆக. 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக. 11) தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.