Sivagangai

News August 19, 2024

சிவகங்கை இளைஞர் சென்னை ‘பப்’பில் பலி

image

சிவகங்கை காரைக்குடி சேர்ந்தவர் முகமது சுகைல் 22. இவர் சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி அதே பகுதியில் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் பப் ஒன்றில் தோழியருடன் நடனமாடிய போது அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பின் ஆம்புலன்ஸ்மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News August 18, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் – ஆட்சியர் தகவல்

image

தேவகோட்டை வட்டத்தில் வரும்21ஆம் தேதியன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தேவகோட்டை வட்டம் ராம் நகரில் அமைந்துள்ள எஸ்.எம்.ஜி மஹாலில் நடைபெற உள்ளது. பொது மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

சிவகங்கை அருகே 2000 செவ்வாழை மரங்கள் சேதம்

image

சிவகங்கை மாவட்டம் இரணியல்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் இரணியல்பட்டியில் அப்துல்காதர் என்பவருக்குச் சொந்தமான 2000 செவ்வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமாகின. கடன் வாங்கி வைத்த வாழை மரங்கள் சேதமடைந்ததால் 15 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

சிவகங்கை எம்பி வேட்பாளர் நிறுவனத்திற்கு சீல்

image

நிதி நிறுவனம் நடத்தி ரூ500 கோடி மோசடி செய்த வழக்கில், சிவகங்கை பாஜக எம்பி வேட்பாளர் தேவநாதன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு (WIN TV) சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று சோதனை செய்யப்பட்டு, ரூ.4 லட்சம், 2 கார்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News August 18, 2024

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு: சிவகங்கை 11.00 மி.மீ, இளையான்குடி 28.00 மி.மீ, திருப்பத்தூர் 44.50 மி.மீ, காரைக்குடி 48.00 மி.மீ, காளையார்கோவில் 47.60 மி.மீ, சிங்கம்புணரி 8.00 மி.மீ லேசான மழையும். மொத்த மழையின் அளவு 187.10 மி.மீ. சராசரி மழை அளவு 20.79 மி.மீ. மானாமதுரை, திருபுவனம், தேவகோட்டை போன்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.

News August 18, 2024

சிவகங்கையில் ரூ.5 கோடி மதிப்பில் இருவழி சாலை

image

சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூரிலிருந்து – என்.புதுார் வரை 11 கி.மீ. நீளமுள்ள தார் ரோடு கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. தற்போது காவனூர் கண்டவராயன்பட்டி மற்றும் உடையநாதபுரம்நெ.புதூர் 2.6 கி.மீ. நீளத்திற்கு ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக
விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் துவக்க உள்ளனர்.

News August 17, 2024

சிறப்பு தொழில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது. மேலும் 04565-232210 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.17) தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

சிவகங்கையில் போலீசாருக்கு பயண உணவு படி இழுபறி

image

சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் கிரேடு 2 முதல் தலைமை காவலர் வரை உள்ள போலீசாருக்கு வழங்க வேண்டிய பயண உணவுப்படி, கூடுதல் பணி நாள் சம்பளம் ஆகியன பல மாதங்களாக வழங்கபடவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை சிவகங்கை எஸ்பி காலதாமதமின்றி கிரேடு 2 முதல் தலைமை காவலர்கள் வரை கிடைக்க வேண்டிய படியை வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.

News August 16, 2024

சிவகஙகை அருகே ரூ.10 லட்சம் மோசடி

image

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News August 16, 2024

சிவகங்கையில் நாளை மின்தடை அறிவிப்பு

image

அ.காளாப்பூர், சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி அருகே அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பிரான்மலை, காஞ்சிரங்கால், வாணியங்குடி, வந்தவாசி, வேங்கைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பராமரிப்புபணி முடியும் வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!