Sivagangai

News August 20, 2024

சிவகங்கை அருகே கோழிக்கழிவால் வினை

image

சிவகங்கை அருகே நாட்டாகுடி கால்வாயில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். கால்வாயில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் கிராமத்தில் தூர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றன. இதனால் ஊரை விட்டே செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமண வரனே கிடைப்பதில்லை என்றும் அக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.

News August 20, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வருகின்ற 22ஆம் தேதியன்று எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும்,
மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட 13 கிராமங்களுக்கும், திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட 6 கிராமங்களுக்குமான முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 169.0 மி.மீ மழைப்பதிவு

image

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த மழையில் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி, இளையான்குடியில் 5.00 மி.மீ, திருப்புவனம் 15.20 மி.மீட்டரும்
திருப்பத்தூரில் 52.80 மில்லி மீ, சிங்கம்புணரி 94.0மி.மீ, காரைக்குடியில் 2.00 மி.மீ மாவட்டத்தில் மொத்தமாக 169.0 மி.மீ மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று  தெரிவித்துள்ளது.

News August 20, 2024

சிவகங்கை மாவட்ட தபால்துறை வேலைக்கான Merit List

image

சிவகங்கை தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. சிவகங்கை தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>.

News August 20, 2024

பெண் காவலரிடம் தவறாக நடந்து காவலர் சஸ்பெண்ட்

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் பெண் காவலரிடம் இதே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் அலாவுதீன் என்பவர் தவறாக நடந்து கொண்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் தனது காவல் நிலைய உயர் அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். காவலர் அலாவுதீனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று உத்தரவிட்டார்.

News August 20, 2024

காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது

image

சிவகங்கை மாவட்டத்தில் தலைமை நீரேற்று நிலையத்தில் மின் வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதில் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்யப்படவுள்ளதால் இன்று (ஆக.20) மற்றும் நாளை (ஆக.21) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பதவியேற்பு

image

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர்களாக பணியாற்றி வந்த அதிகாரிகள் வெவ்வேறு பதவிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக செல்வ சுரபி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

News August 19, 2024

கீழடிக்கு வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதி

image

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல் இன்று (ஆக.19) வருகை தந்தார். அவரை திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி சந்தான குமார் வரவேற்றார். தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்டார். அகழாய்வு குறித்து தொல்லியல் துறையினர் நீதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

News August 19, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழை

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஆக.19) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News August 19, 2024

கீழடி அருங்காட்சியகத்தில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள்

image

கீழடிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், சுந்தர்மோகன் உள்ளிட்டோர் நேற்று கீழடியில் அகழாய்வு நடந்த இடம், அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இளையான்குடி நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் உடன் சென்றார்.

error: Content is protected !!