India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு தலைவர் அங்குசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “கொல்லங்குடி கதிரேசன் செட்டியார் மஹாலில் நாளை மாலை 3 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமை தாங்குகிறார். இதில், பிரச்சார பிரிவின் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “விஜய் கட்சி கொடி ஏற்றினால் மட்டும் போதுமா? கொள்கை என்ன?; அரசை நடத்தி விடலாம்; அரசியல் கட்சிகளை நடத்துவது எளிதல்ல; கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களை விட தோல்வியடைந்தவர்களே அதிகம்; தமிழ்நாட்டில் அதிமுக தான் 2 வது பெரிய கட்சி, பாஜக அல்ல; காங்கிரஸ் 2ஆம் இடத்தை பிடிக்க கட்சியின் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும்”என கூறியுள்ளார்
தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தனியாக கட்சி நடத்துவது சிரமமான காரியம் என்பது பட்டால்தான் விஜய்-க்கு தெரியும் என்றும், விஜய்யும் பட்டுத் தெரிந்து கொள்வார் என்றும் கூறினார்.
மைசூரு – காரைக்குடி சிறப்பு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ததற்கு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காரைக்குடி வரை இயக்கப்பட்ட இந்த ரயிலானது தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.4 மற்றும் 7 ஆகிய நாட்கள் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மறுநாள் காலை 11:05க்கும் செங்கோட்டைக்கு மாலை 4:50க்கு சென்றடையும்.
சிவகங்கை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களாக தேசிய தரவு தளத்தில் பதிவு பெற்று 31.03.2022-க்குள் விபத்தினால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தாலோ, அமைப்புசாரா தொழிலாளர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா தொழில் முனைவோர்கள், தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு https://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக, வருகின்ற 26.08.2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 20.08.2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில் தமிழக அரசு தற்போது நாட்களை நீட்டித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடனுதவி வழங்குவது மட்டுமின்றி தொழில் முனைவோருக்கு மூலப்பொருள் கொள்முதல், சந்தைபடுத்துதல், தொழில் திட்ட ஆலோசனை, சுற்றுச்சூழல் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் முகாம் காரைக்குடியில் உள்ள தொழில் முதலீட்டு கிளை அலுவலகத்தில் செப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு பயன்பெருமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவடடத்தில் பெய்த மழை அளவு வெளியாகி உள்ளது. அதன்படி சிங்கம்புணரி 38.20 மி.மீட்டர், திருப்புவனம் 8.40மி.மீ, திருப்பத்தூர் 72.20 மி.மீ, சிவகங்கை 29.00 மி.மீ, மாவட்டத்தில் சராசரியாக 24.42 மி.மீ மாவட்டத்தில் மொத்தமாக 219.80 மி.மீ மழை இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாலைகிராமம் பேருந்து நிலையம் அருகே சிவகங்கை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையில் காவலர்கள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தினை நிறுத்தி சோதனை செய்ததில் 1250 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாலைகிராமத்தை சேர்ந்த மணிமுத்து என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்
மானாமதுரை சிப்காட் அருகே உள்ள ராஜேந்திரன் நகரில் வசித்து வருபவர் அர்ச்சுனன்(24). இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள அண்ணாநகரில் வசித்து வரும் சேத்ரோ என்ற இளைஞர் தான் போலீஸ் என்று கூறி போலி அடையாள அட்டையை காட்டி ரூபாய் 28 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளார். இவரை மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.