India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட 09 கிராமங்களுக்கும்,
சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 08 கிராமங்களுக்கும் மற்றும்
காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 01 கிராமத்திற்குமான “மக்களுடன் முதல்வர்” முகாம் வரும் 28.08.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பயறு வகைகளான உளுந்து, தட்டைப்பயறு, கொள்ளு ஆகியன 1,500 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. பயறு சாகுபடி செய்ய எக்டேருக்கு 5 கிலோ வரை 50 சதவீதம் மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை நேரில் அணுகி, பலன்தரும் பயறு வகை சாகுபடியில், தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை விரிவாக்க மையங்களில், மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெற்றிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 27ஆம் தேதியன்று திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும்,
சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும் மற்றும்
கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்குமான முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.25) தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோர் 5 பிரிவுகளில் 53 வகை விளையாட்டுகளில் பங்கேற்க www.sdat.tn.gov.in-ல் செப்.2 வரை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை கமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் நாகராஜ் 17. மாற்றுத்திறனாளி இவர் பீர்க்கலைக்காடு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தார். விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடுகளை மேய்ப்பார். ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சியளித்தனர்.முடிந்த நீட் தேர்வில் 720க்கு 136 மதிப்பெண் எடுத்து, மாற்றுத்திறனாளிக்கான 3% இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்
வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குயவர் தெருவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி பாண்டியராஜன் தனது ஒற்றை கையால் 3 அடி முதல் 10 அடி வரை உள்ள பெரிய விநாயகர் சிலைகளை தத்துருவமாக செய்து வருகிறார். இவர் செய்யும் சிலைகளை பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விரும்பி வாங்கி செல்வார்கள்.
அரசு பள்ளியில் உயர் கல்விக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வியுடன் நீட், ஜெ.இஇ மற்றும் பிற உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி வீதம் மாநில அளவில் 40 பள்ளிகள் செயல்படுகிறது. இதில் சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டன.இதில் இந்தாண்டுக்கான விருதை கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி பெற்றது.
சிவகங்கை மாவட்டம் கடைக்கோடி பகுதியான சாலைக்கிராத்திலிருந்து ஆர் .எஸ் மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், மானமதுரை, மதுரை, ஆனந்தூர், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பஸ்களும், சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஒட்டை, உடைசலாக பின்பக்க கண்ணாடி இல்லாமல் இருப்பதாலும் பயணிகள் சிரமப்படுகின்றன.
காரைக்குடியில் அமைந்துள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமையில், ஆக., 25 மாலை 5 மணிக்கு திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது . கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு(ம)பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.