India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்குடியில் சூரக்குடி சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் என 5 பேருக்கு நேற்று(ஆக.27) அரசு மருத்துவமனையில் அருகே உள்ள உணவகத்தில் இட்லியும், சாம்பாரும் வாங்கி வந்து கொடுத்துள்ளனர். அவற்றை நோயாளிகள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, இட்லி சாம்பாரில் பல்லி இருந்ததைப் பார்த்து நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நிழல் காண இயலாத தினம் சிவகங்கை காளையார்கோவில் இளையான்குடி ஒன்றியங்களில் இன்று மதியம் 12:17 மணிக்கும் மானாமதுரை திருப்புவனம் ஒன்றியங்களில் இன்று மதியம் 12:18 மணிக்கும் நிழல் காண இயலாத தினம் நடக்கிறது. வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் ஒருநாளும் ஆக. மாதத்தில் ஒருநாளும் நிழல் காண இயலாத நிகழ்வை குறித்த நேரத்தில் காண அனைவரும் காண மாவட்ட அறிவியல் செயலாளர் ஆரோக்கியசாமி அழைப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்த 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குழாய்களும், 7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குழாய்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளன. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 10ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஆறு குழாய்கள் இணைக்கப்பட்ட 174 செ.மீ., நீளம் கொண்ட வடிகால் சுடுமண் குழாய் போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவரிடம் கடந்த 2008ஆம் ஆண்டில் வேலங்குடி வி.ஏ.ஓ.,வாக இருந்த காந்தி, இடம் தொடர்பான புல வரைபடம் அடங்கல் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கியதாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் காந்தியை கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று வி.ஏ.ஓ. காந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.
மீன் வளர்ப்போர், கண்மாய்களில் மீன் பாசி
குத்தகை எடுப்போர் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் அனைவரும் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்திடல் வேண்டும் அல்லது முகவரியிலோ, நேரிலோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9384824553 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாவார். அவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொருவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியமும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று (ஆக.27) தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99654 80973, 97904 01672, 63854 75657, 99420 99481 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் சாக்கோட்டை வட்டாரத்தில் சங்கராபுரத்தில் உள்ள சமுதாய கூடத்திலும், கல்லல் பகுதியில் கண்டரமாணிக்கம் காமாட்சி ஆச்சி திருமண மண்டபத்திலும், திருப்பத்தூர் பகுதியில் கீழச்சீவல்பட்டி ஏஎஸ்சி திருமண மண்டபத்திலும் நாளை மறுநாள்(ஆக.29) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகேயுள்ள இலந்தங்குடிபட்டியைச் சோர்ந்தவர் சுப்பிரமணியன்(65). இவர் மதுரை திருநகரைச் சோர்ந்த பரமகார்த்தி என்பவரிடமிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டாராம். கூறியபடி வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த பரமகார்த்தி சிவகங்கை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நேற்று(ஆக.26) புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.