Sivagangai

News September 4, 2024

பசுமை தொழில் முனைவு திட்டம் – விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில்
பசுமை தொழில் முனைவோர்கள் “பசுமை தொழில் முனைவு திட்டத்தின்” கீழ் பயன் பெறும் வகையில் வரும் 9ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை
தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.4) தகவல் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்க கல்வித் துறையில் ராஜ்குமார், வெற்றிவேந்தன், லட்சுமி, அமுதா ஆகிய நான்கு பேரும், பள்ளிக் கல்வித் துறையில் ஜோசப் கமலாராணி, ஜாய்சிமேரி, வணிதா, முத்துக்குமார் ஆகிய நான்கு பேரும் நாளை சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது வாங்கவுள்ளனர்.

News September 3, 2024

காளையார்கோவில் இரட்டை கொலை வழக்கில் தடுப்பு காவல் ஆணை

image

காளையார்கோவில் காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கின் எதிரிகளான மதன்(21), முத்துப்பாண்டி(20), செல்வகுமார்(28), மணிகண்டபிரபு(22) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிவகங்கை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அவர்கள் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

கீழடிக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள 
இமானுவேல் சேகரன் 67வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு வரும் 11ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திலுள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (செப்.3) தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

சிவகங்கையில் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67வது நினைவு தின நிகழ்ச்சியை முன்னிட்டு 11ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டம் மற்றும் ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

image

திருப்பத்தூர் தெற்கு, வடக்கு ஒன்றியம் பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் புதுகாட்டாம்பூர் பிளாசா கார்டனில் (செப்-2) நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு, “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்க நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும்”என பேசினார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

News September 2, 2024

சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (02.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உட்பட பலர் உள்ளனர்.

News September 2, 2024

வேலை நிறுத்தம் – டிட்டோ ஜாக் மாநாட்டில் முடிவு

image

சிவகங்கை டிட்டாே ஜாக் அமைப்பினர் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம், செப்., 29, 30 மற்றும் அக்.,1 ஆகிய தேதிகளில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு நடைபெற்றது. செப்.,10ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதுடன் அன்று காலை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

News September 1, 2024

சிவகங்கை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவிக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்; வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04575-241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News September 1, 2024

காரைக்குடி மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி

image

சிவகங்கை மாவட்டம் பிஎன்ஐ செட்டிநாடு சார்பாக இன்று மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டிகள் காரைக்குடி பிருந்தாவன் உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. மொத்தம் தமிழக அளவில் 60 அணிகள் பங்கேற்றுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎன்ஐ செட்டிநாடு சாப்டர் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.

error: Content is protected !!