India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, பழைய நெடுவயல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(29) கடந்த 2019ம் ஆண்டு 5 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டு மாடிக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கானது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று குற்றவாளி ரமேஷிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முத்துமுருகன். இவர் பசியாபுரம் வசந்த் (35) என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து இன்று விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை காவல்துறை சார்பில் அடுத்தவரை புண்படும் நோக்கில் வாசகங்கள் பேனர்களில் இடம்பெறக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளம் பகுதியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி பேனரில் ‘தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும் ‘ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த பேனரை வைத்த 3 பேர் மீது திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி இன்று (செப்.08) காலை 9.15 மணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகைக்கு வருகை தர இருக்கிறார். காலை 10.25 மணியளவில் மஞ்சுளா பாலச்சந்தர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார். மேலும் 10.45 மணிக்கு பவானி கணேசன் இல்ல திருமண மேடைக்கு வருகை புரிகிறார். பிறகு 12.00 மணியளவில் தேவகோட்டை ஜோன்ஸ் ரூஸோ இல்லத்திற்கு செல்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில், மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெற்றிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 22.21 இலட்சம் மதிப்பிலான இடுபொருட்களை விவசாயிகள் POS மூலமாக எளிய முறையில் பெற்று பயன்பெற்றுள்ளனர். எனவே, விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உதவி மாவட்ட ஆட்சியராக ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேவகோட்டை கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை இனி இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வருகின்ற 24ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை, திருப்புவனம் நகர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 55 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் செப்.10-ம் தேதி அமைச்சர் உதயநிதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அரசு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். மாலை 4.30 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் விளையாட்டு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக மைசூர் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை – மைசூர் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. 06241 மைசூர் – செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் 04/09/2024 (புதன்) மற்றும் 07/09/2024 (சனி) ஆகிய தேதிகளிலும், 06242 செங்கோட்டை – மைசூர் சிறப்பு விரைவு ரயில் 05/09/2024 ( வியாழன்) மற்றும் 08/09/2024 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் புறப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.