India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு உயர்வுக்குப் படி முதல் கட்ட முகாம் 13.09.2024 அன்று மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி, சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் சமுதாய அமைப்பாளர் பணியில் 2 இடங்கள் காலியாக உள்ளன. சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கு தேவகோட்டை நகராட்சி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிகளைச் சார்ந்தவர்கள் மேலாளர், சிவகங்கை நகர்புர வாழ்வாதார மையம் (CLC) சிவகங்கை நகராட்சி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள 874 ஊராட்சிகளுக்கு 997 விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு துறைகளின் சாா்பில் 1,607 பயனாளிகளுக்கு ரூ. 34.95 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.13.14 கோடியில் நிறைவுற்ற 18 திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, மாவட்ட விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் விடுதி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது போன்று வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரி மாணவர்களை எந்த வேலைக்கும் பயன்படுத்தக் கூடாது. இச்செயல் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, இன்று(செப்.11) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு/இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா ஆஜித் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை அருகே மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாங்குளம், சித்தலகுண்டு, ஆலங்குளம், சீகன்குளம், பனிக்கனேந்தல், மூங்கில் ஊரணி காளீஸ்வரி நகர் ஆகிய பகுதிகள் மானாமதுரை நகராட்சி எல்லை பகுதிகளுக்கு அருகில் உள்ளது. இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனை இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் கிடைக்காது என கூறி அதனை இணைக்க வேண்டாம் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புத்துார் அருகே குருவாடிப்பட்டி ஆரோக்கியசாமி மகன் செபஸ்டின்ஆண்டனி (29). இவர் புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் போலீசாக இருந்தார். இவர் நேற்று கல்லலில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டு, டூவீலரில் புதுக்கோட்டை நோக்கி வந்தார். திருமயம் அருகே சென்ற போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே போலீசார் பலியானார். இவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவில் 704 மகளிர் குழுக்களுக்கு, ரூ.65.38 கோடி மதிப்பிலான வங்கி கடன் கொடுக்கும் விழா நடைபெற்றது இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆச அஜித் தலைமை வைத்தார். இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். இவ்விழாவில் தேவகோட்டை சப் – கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, அகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நகரம் பட்டியில் வாளுக்கு வேலி அம்பலம், சிராவயலில் அண்ணல் காந்தி ஜீவா நினைவு மண்டபம் கட்டிட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். அழகப்பா பல்கலைக்கழக கூட்டரங்கில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகிறார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரியில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அரசாணை 243ஐ ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலுயுறுத்தி இன்று(செப்.10) வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்கள் எவரும் பணிக்கு வராத காரணத்தினால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீடு திரும்பிகின்றனர்.
Sorry, no posts matched your criteria.