Sivagangai

News January 30, 2026

சிவகங்கை: பள்ளி மாணவன் மீது தாக்குதல்

image

தேவகோட்டை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் முன்பகை இருந்தது. இந்த பகை காரணமாக தேவகோட்டை மாந்தோப்பு வீதியில் வைத்து 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவனை கையை மடக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 4 மாணவர்கள் மீதும் தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு.

News January 30, 2026

சிவகங்கை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

சிவகங்கை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல்<<>> ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

சிவகங்கை: இளம்பெண் பாலியல் வழக்கில் வாலிபருக்கு தண்டனை

image

சாக்கோட்டை அருகே கடந்த 2022ம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் தேவா (எ) மணிகண்டனை (25) கைது செய்தனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த சிவகங்கை மகளிர் விரைவு கோர்ட் தேவாவிற்கு பாலியல் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கியும் நேற்று தீர்ப்பளித்தது.

News January 29, 2026

சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

முதல்வரின் ஜன.31ம் தேதி சுற்றுப்பயண விவரம்

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார். இந்நிலையில் ஜன.31ம் தேதி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டடம், ரூ.30.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் மற்றும் செட்டிநாடு வேளாண் கல்லூரியில் ரூ.61.78 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் அவர் சிறப்புரையாற்ற உள்ளார்.

News January 29, 2026

சிவகங்கை: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

JUST IN சிவகங்கை: டிரோன் பறக்க தடை; ஆட்சியர் எச்சரிக்கை

image

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜன.30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்தார். தடையை மீறி டிரோன்களை பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 29, 2026

சிவகங்கை: நிலங்களை அளவு செய்ய புதிய இ – சேவை

image

சிவகங்கை மாவட்டத்தில் நிலங்களை அளவு செய்ய இ- சேவை மையங்களை அணுகலாம். வட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இனிய வழியில் விண்ணப்பிக்கும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து பின்னர் மனுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணைய வழிச்சேவை மூலமாக பத்திரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News January 29, 2026

சிவகங்கை: இரும்பு கடைக்குள் புகுந்த மலைப்பாம்பு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே ஏரியூர் விலக்கு சாலையை அடுத்த இரும்பு கடையில் பாம்பு ஒன்று படுத்திருந்தது தெரியவந்த நிலையில் கடையின் பணியாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருப்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அது மலைப்பாம்பு என தெரியவந்தது. பின்னர் அதனை பிடித்து மதகுபட்டி மண்மலை வனப்பகுதியில் விடுவித்தனர்.

News January 29, 2026

சிவகங்கை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!