Sivagangai

News January 28, 2026

சிவகங்கை: தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு

image

காளையார்கோவில் அருகே மாடுகம்மாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது உறவினரான கல்பனா என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், செல்வராஜ் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஜெயபாலன் பெண்ணிடம் ஏன் இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் (ம) செல்வராஜ் ஜெயபாலனை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு.

News January 28, 2026

சிவகங்கை: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

image

சிவகங்கை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News January 28, 2026

சிவகங்கை: பீரோவை உடைத்து நகை திருட்டு

image

திருப்பாச்சி அருகே முளக்குளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்சிவகங்கை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது பீரோவில் வைத்திருந்த 23½ பவுன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரின் திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 தினங்களுக்கு முன்பு திருப்புவனம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

News January 28, 2026

சிவகங்கை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி காரைக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லை என மன வேதனையில் இருந்துள்ளார். பெற்றோர்கள் ஆறுதல் கூறி வந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

காரைக்குடியில் வாளை காட்டி கொலை மிரட்டல்

image

காரைக்குடியை சேர்ந்த நிர்மலா ஜான்சி என்பவரது மகளுடன் அஜ்மல் கான் என்பவர் பழகி வந்தார். அஜ்மல் கான் மது அருந்தி விட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்ததால் நிர்மலா ஜான்சியின் மகள் அவருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அஜ்மல் கான், நிர்மலா ஜான்சியின் வீட்டிற்கு சென்று வாளை காட்டி அவதூறாக பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் இளைஞர் மீது வழக்குப்பதிவு.

சிவகங்கை: பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து

image

அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கல்லூரி சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மளிகைப் பொருட்கள் வாங்கிவிட்டு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ராமசாமி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். (இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!