India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பூசலக்குடி, அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், சாத்தனகோட்டை, சிறுவாச்சி, ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE

பூசலக்குடி, அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், சாத்தனகோட்டை, சிறுவாச்சி, ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE

சிவகங்கை மாவட்டம், வடலூர் இராமலிங்கனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற 1.2.2026 அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

1927-ல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தியடிகள், சிறாவயலில் தோழர் ப.ஜீவானந்தம் நடத்தி வந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அதன் நினைவாக சிறாவயல் மஞ்சுவிரட்டு திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகள் – தோழர் ஜீவா திருவுருவ சிலைகளுடன் கூடிய அரங்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கோட்டையூரை சேர்ந்தவர் கவுசல்யா. காரைக்குடிக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அழகப்பா பல்கலை அருகே வந்தபோது இவருக்கு அருகில் இருபெண்கள் நின்றுள்ளனர். அதற்கு பின் அழகப்பா கல்லூரியில் இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஷாலினி இருவரையும் கைது செய்தனர்.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<

தேவகோட்டை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் முன்பகை இருந்தது. இந்த பகை காரணமாக தேவகோட்டை மாந்தோப்பு வீதியில் வைத்து 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவனை கையை மடக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 4 மாணவர்கள் மீதும் தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.