India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16352 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் பிப்-5, 8, 12, 15, 19, 22, 26 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, கிராமப்புறங்களில் முதுகெலும்பான 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு காலி செய்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 65 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. பாஜகவினருக்கு காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்து கல்லூரியை பார்வையிட்டார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் எம்பி, சிவகங்கை எம்பி, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செட்டிநாட்டில் காலை 09.30 மணிக்கு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து காலை 10.00 மணிக்கு காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரியை திறந்து வைத்து, ரூ.2,872 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர் மணி (43). இவருக்கும் இவரது உறவினரான மாணிக்கம் (48)என்பவருக்கும் இடப்பிரச்சனை இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் மணி, அவரது தாய் அமிர்தம் (68) ஆகியோர் மாணிக்கம், அவரது மனைவி பஞ்சு (38), ஜெயா (25) ஆகிய மூவரை அரிவாளால் வெட்டினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் முரளி, மணி மற்றும் அமிர்தம் ஆகிய 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

சிவகங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <

மணமேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33), இருசக்கர வாகனத்தில் கும்பங்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் பலமாக மோதியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.