Salem

News January 20, 2025

சேலம் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள்

image

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் ஆர்.எஸ்., மேச்சேரி, ஜலகண்டாபுரம், கருப்பூர், மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி, மல்லியக்கரை, வேம்படிதாளம், எட்டிக்குட்டைமேடு, நங்கவள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (ஜன.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

சேலத்தில் ரஞ்சிக் கோப்பை போட்டிகள்

image

வாழப்பாடி அருகே உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் ஸ்டேடியத்தில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் ஜன.23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு-சண்டிகர் அணிகள் மோதுகின்றன. ஜன.23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் சேலத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டி முதன் முறையாக ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

News January 19, 2025

பரிசை வென்று அசத்திய சேலம் காளை

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தைச் சேர்ந்த விக்கி என்பவரின் காளை கலந்து கொண்ட நிலையில், காளையை மாடுபிடி வீரர்கள் தொட்டுக்கூடப் பார்க்க முடியாததால் அந்த காளை ரூபாய் 15 லட்சம் பரிசை வென்று அசத்தியது. சொந்த ஊர் திரும்பிய காளைக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News January 19, 2025

சேலம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறைஉட்கோட்டத்திற்குட்பட்டசேலம் ஊரகம்,சங்ககிரி,ஆத்தூர்,ஓமலூர்,மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் |அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News January 19, 2025

சேலத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள்

image

வாழப்பாடி அருகே உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் ஸ்டேடியத்தில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் ஜன.23- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு-சண்டிகர் அணிகள் மோதுகின்றன. ஜன.23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் சேலத்தில் ரஞ்சிக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டி முதன் முறையாக ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

News January 19, 2025

நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம்

image

சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (ஜன.19) திரைப்பட நடிகர் தாடி பாலாஜி தனது மகளோடு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடிகருக்கு மாரியம்மன் சுவாமி புகைப்படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. நடிகருடன் கோயிலில் இருந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News January 19, 2025

மதுரைபோல் சேலத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த கோரிக்கை

image

மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் பாகுபலி காளை முதல் பரிசை பெற்றது. சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேல் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றன. எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோல் சேலத்திலும் வாடிவாசல் அமைத்து நடத்த வேண்டும் என சேலம் பாகுபலி காளையை வளர்த்த மோகன்ராஜ், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

News January 19, 2025

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் கைது!

image

சேலம் அம்மாப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அழகேசன் (40) திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான நிலையில் அம்மாபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல், சேலம் அழகாபுரம் ஸ்வர்ணபுரி பகுதியைச் சேர்ந்த பிலால் (36) ஜாமீனில் வெளியே வந்து 2 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அழகாபுரம் போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 19, 2025

2 நிமிடத்தில் முடிந்த தட்கல் டிக்கெட் புக்கிங்

image

பொங்கல் முடிந்து முக்கிய நகரங்களுக்கு திரும்ப இன்றைய ரயில் பயணத்திற்கான தட்கல் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 2 நிமிடத்தில் முடிந்தது. பெரும்பாலான பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. சேலம் ரயில்வே கோட்ட கணினி முன்பதிவு மையத்திலும் தட்கல் பதிவுக்கு ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனாலும் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

News January 19, 2025

கெங்கவல்லி: அங்காள பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம்

image

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் இன்று (ஜன.19) மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்று கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!