India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, சேலம் மாநகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி உள்ளிட்ட தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களும் அதிகாரிகளால் முறைப்படி பூட்டப்பட்டன. அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சர் புகைப்படங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அரசு ஐடிஐ அருகே உள்ள பாலடைந்த கட்டிடம் முன்புறம் மரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக மேட்டூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் பொன் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பது தெரியவந்தது. இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வெள்ளி வியாபாரிகள் வெள்ளிக் கட்டிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் .மேலும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து என மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி அறிவிப்பு!

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம்.

சேலம் மாநகரில் இன்று (15.3.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் லோகூர் பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக, ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் சேலம் சந்திப்புடனும், மறு மார்க்கத்தில் சேலத்திலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் ரயில் ஈரோடு சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், இதனால் பயணிகள் அதற்கு தகுந்தார் போல் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.