Salem

News April 6, 2025

சேலம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 6, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

image

“பசூர்- ஊஞ்சலூர் ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, வரும் ஏப்ரல் 08, 11 தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; மறுமார்க்கத்தில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; மேற்கண்ட ரயில் கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது” என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News April 6, 2025

சேலத்தில் இலவச பார்மசிஸ்ட் பயிற்சி!

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 பார்மசிஸ்ட் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

News April 6, 2025

சேலம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி 

image

சேலம் : கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. இந்த ஒரு மாத கால இலவச பயிற்சி, தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 19 முதல் 45வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதில், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.09 ஆகும். இதுகுறித்த விவரங்களுக்கு 7550369295, 9566629044 ஆகிய எண்களை அணுகவும். 

News April 6, 2025

சேலம் மாவட்டம் பிரிகிறதா..?

image

சேலம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் சட்டப்பேரவையில் பேசினார். அதில், சென்னைக்கு அடுத்த்படியாக 11 தொகுதிகளைக் கொண்டு சேலம் திகழ்வதாக பேசினார். அதுபடி, மேட்டூர், ஆத்தூர், சேலம் என மூன்றாக பிரிக்க வேண்டும் எனப் பேசினார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் எடப்பாடியை தனி மாவட்டமாக பிரிக்க பேச்சு எழுந்தது. சேலம் மக்களே இதுகுறித்து உங்கள் கருத்து?

News April 5, 2025

குழந்தை பாக்கியம் தரும் கந்தாஸ்ரமம் !

image

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் இயற்கை சூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளது கந்தாஸ்ரமம். இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கந்தனை வழிபட்டுச் செல்கின்றனர். முருகனும் அவ்ரது தாயார் பார்வதியும் எதிர் எதிர் சன்னதியில் இருப்பது இந்தக் கோயிலில் மட்டும் தான். இங்குள்ள முருகனை தரிசித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 5, 2025

பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

News April 5, 2025

சேலத்தில் நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

image

ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மேற்கு வட்டம் மஜ்ரா கொல்லப்பட்டி, இரும்பாலை மெயின் ரோடு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

‘படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவி’

image

“சேலம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 622 திருநங்கைகளில் 569 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு முகாம் நடத்தி விரைவில் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்; படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!