India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!

சேலம் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு கருத்துரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், நாட்டிலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பெண்களுக்கு திருமண வயது 18 என அரசு நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சிலர் 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். எனவே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<

சேலம் சிட்டி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்க வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளது. அவை மால்வேர் கொண்டு உங்கள் கைபேசியை பாதித்து தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும். புகார் பதிவு செய்ய www.cybercrime.gov.in பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சேலம் கோட்டத்திற்கு முதற்கட்டமாக 16 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள இப்பேருந்து சேவைகளின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எண்-1 பேருந்து சேலம் மாநகரத்தில் பயணிக்க உள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் முதல் அயோத்தியாபட்டணம் வரை இயக்கப்படும், இப்பேருந்து 3 பைபாஸ் வழியாக இயக்கப்படும்.

எடப்பாடி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுகிறது என எடப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியார் லாட்ஜில் அந்த கும்பல் இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ராஜசேகர், ஜீவா, சுரேஷ்குமார், சசிகுமார், மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 5 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம் மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு செப்.16 மற்றும் 17 மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சேலம் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சி கடந்த ஆடி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசின் 32 அரங்குகள் அத்துடன் ராட்டினம், ரயில்கள், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 55,245 பேர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் அதிக அளவில் மக்கள் இந்த அரசு பொருட்காட்சிக்கு வருவதாக மாநகராட்சிஅதிகாரிகள் மேலும் 18 நாட்கள் நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.