India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <

பல்வேறு புகார்களுக்கு உள்ளான பூலாம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. பரமசிவம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்.ஐ. மணி, ஆகிய 2 பேரையும் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 2 எஸ்.ஐ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 3,89,785 விவசாயிகளுக்கு ரூபாய் 3,266.35 கோடி பயிர்க்ககடன்களும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் ரூபாய் 1,038 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 34,434 விவசாயிகளுக்கு ரூபாய் 337.46 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். அதனைத் தொடர்ந்து கருப்பூரில் உள்ள அரசு விழாவில் பங்கேற்று 6000 சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இதில் சேலம் நாமக்கல் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்.19-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானோரை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2401750 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப்பயணம் சேலத்தில் மேற்கொள்ள உள்ள நிலையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு சேலம் மத்திய மாவட்ட த.வெ.க செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மனு வழங்கியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-ஜெய்ப்பூர்-கோவை ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (06181/06182) அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.16- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அக்.16, 23,30,நவ.06 தேதிகளில் கோவை- ஜெய்ப்பூர், அக்.19, 26,நவ.02,09 தேதிகளில் ஜெய்ப்பூர்- கோவை சிறப்பு ரயில்கள் இயக்கம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் இன்று (15.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Sorry, no posts matched your criteria.