India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
சேலம் கோட்டை கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 60 வயதான இந்திரா வீட்டில் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும், அதனால் அவரது கணவர் பாலகிருஷ்ணன் மனைவியை கொலை செய்திருக்கலாம். தற்போது பாலகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார்.
சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் அனுமதியின்றி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கிச்சி பாளையம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்த பங்களாதேஷை சேர்ந்த காசி அலி, மிர்சரி, இஸ்மாயில், மிர்ஆரிப், செரிப், செலிம் ஆகிய ஆறு பேரை கண்டுபிடித்து உரிய ஆவணங்கள் இல்லாததால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாரமங்கலம், கருக்குபட்டி பவளத்தானூரை சேர்ந்த தமிழ்மணி (37) தறித்தொழில் செய்து வந்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி விளையாடி இழந்துள்ளார். பணத்தைத் திருப்பி செலுத்தாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆத்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மாலையில் பள்ளி வளாகத்துக்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவியின் பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் அளித்தனர். இதன்பேரில் மாணவர்கள் 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி கூறியதாவது, போதையில்லா தமிழ்நாடு என்ற கைபேசி செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன் வாயிலாக போதை பொருள் பயன்படுத்துதல் குறித்த தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக வருகின்ற 18ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கான அறிமுக கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சேலம் டவுன் சட்டம், ஒழுங்கிற்கும், அங்கு பணியாற்றிய சந்திரகலா மாநகர குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார் கிச்சிப்பாளையம் சட்டம், ஒழுங்கிற்கும், அங்கு பணியாற்றிய ஜெய்சீல்குமார் டவுன் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதாரத்தை தவிர்த்திட 50 சதவிகித மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்க உள்ளதாகவும், 10 வருட உத்தரவாத்துடன் அமைக்கப்படும் இந்த இந்த மின்வேலியால் உயிர் சேதம் தவிர்க்கப்படும் என்றும் விருப்பமுள்ள விவசாயிகள் அலுவலகத்தை அணுகி விபரங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம் ஜாகிர் அம்மாப்பாளையத்தில் அமைந்துள்ள சேலத்து காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் இன்று (பிப்.12) தை மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணங்கொடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆத்தூர் அருகே இன்று காலை அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதே போல் மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது. தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி வளைவில் லாரி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த நான்கு பெண்கள் படுகாயம் அடைந்தனர். கெங்கவல்லி தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையில் ஜேசிபி உதவியுடன் மீட்டு, காயமடைந்தவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.