Salem

News March 20, 2025

சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

சேலத்தில் நாளை (மார்ச் 21) தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு, பொறியியல்,செவிலியர், போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 19, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (19.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 19, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.19 ரோந்து பணி அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News March 19, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சேலம் வழியாக செல்லும் கோவை-திருப்பதி-கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22616/22615) LHB பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 22- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

டேங்கர் லாரி மோதி வைக்கோல் லாரி கவிழ்ந்து விபத்து

image

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை மேம்பாலத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி மோதியதில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மினி லாரி ஓட்டுநர் காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. 

News March 19, 2025

3 கொலையாளிகள் சுட்டுப் பிடிப்பு

image

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் இன்று கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 3 பேர் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு கொலையாளி கார்த்திகேயன் கையில் காயத்துடன் பிடிபட்டுள்ளார்.

News March 19, 2025

சேலம் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்  எங்கு? எப்போது

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை புதுப்பிக்க திருத்தம் செய்ய வருகின்ற ▶️19ஆம் தேதி ஓமலூர்▶️20 ஆம் தேதி எடப்பாடி ▶️21-ஆம் தேதி சேலம் ▶️22-ஆம் தேதி கொளத்தூர் ▶️24 தேதிஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

கணவன் உயிரிழப்பு- மனைவிக்கு சிகிச்சை

image

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 19, 2025

நம்ம ஊரு திருவிழாவில் நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு சேலம் மாவட்டத்தில் வரும் 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்

image

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போன்றவற்றை நடத்துவதற்கு, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன் விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவு 19ம் தேதி (இன்று) நள்ளிரவு முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என சேலம் மாநகர ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!