Salem

News April 7, 2026

BREAKING: எடப்பாடி பழனிச்சாமி மனு ஏற்பு

image

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனைக்குப் பின் அவரது மனு ஏற்கப்பட்டது. இவர் இத்தொகுதியில் இது 8-வது முறையாக போட்டியிடுகிறார்.

News April 7, 2026

சேலம்: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

சேலம் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதியே கடைசி நாள் ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

News April 7, 2026

சேலம்: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

சேலம்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

சேலம் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

சேலம்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-180-7788 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

BREAKING சேலம் திமுக நிர்வாகிகள் அலுவலகத்தில் திடீர் ரெய்டு!

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக வடக்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்டப் பிரதிநிதி சம்பத் மற்றும் அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோரது இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஸ்ரீராம் அலுவலகத்திலும் இந்த ஆய்வு தொடர்கிறது. இந்தச் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 6, 2026

சேலம்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்

News April 6, 2026

சேலம்: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

சேலம் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 6, 2026

சேலம்: மகனின் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழப்பு

image

சேலம் கீரைகாரனுூரைச் சேர்ந்த மகாலிங்கம், தனது தாய் சரோஜாவுடன் பைக்கில் சென்றபோது, உத்தமசோழபுரம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மகாலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!