India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1792, ஏப்ரல் 4 அன்று சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகக் கருதப்படும் இது,தொடக்கத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1965-ல் தருமபுரியும், 1997-ல் நாமக்கல்லும் பிரிக்கப்பட்டன.இன்று சேலம் மாவட்டம் தனது வரலாற்றுப் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. SHAREit

வாழப்பாடி அருகே பேளூரைச் சேர்ந்த சினேகா(22), நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கும் கார்த்திகேயன் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்து, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான சில ஆண்டுகளிலேயே தற்கொலை நிகழ்ந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு வாழப்பாடி போலீசார் பரிந்துரைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் அர்த்தனாரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இத்தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்ட அனுபவம் கொண்ட இவருக்கு, காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் அவருக்கு நேரில் சந்தித்துத் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சேலம் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

சேலம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

சேலம் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <

சேலம் நாவலூரைச் சேர்ந்த வீரமணி (56), வீரகனூரிலிருந்து வீடு திரும்பியபோது வி.இராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சோகச் சம்பவம் குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் அ. அருண் தம்புராஜ், ஐ.ஏ.எஸ். 2012-இல் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற இவர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலும், மக்களுடன் எளிமையாகப் பழகுவதிலும் சிறந்தவர். கடலூரிலிருந்து இவர் மாற்றப்பட்டபோது, பொதுமக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தது இவரது மக்கள் பணிக்கான நற்சான்றாகும்.
Sorry, no posts matched your criteria.